மழையால் உடைந்த பாலம் புதுப்பிக்கப்படுமா?


மழையால் உடைந்த பாலம் புதுப்பிக்கப்படுமா?
x
தினத்தந்தி 3 May 2021 1:15 AM GMT (Updated: 3 May 2021 1:15 AM GMT)

தேவாலா அட்டியில் மழையால் உடைந்த பாலம் புதுப்பிக்கப்படுமா? என்று கிராம மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

கூடலூர்

தேவாலா அட்டியில் மழையால் உடைந்த பாலம் புதுப்பிக்கப்படுமா? என்று கிராம மக்கள் எதிர்பார்த்து உள்ளனர். 

மழையால் பாலம் உடைந்தது

கூடலூர் தாலுகா தேவாலா அட்டி உள்பட பல்வேறு கிராமங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கூடலூரில் இருந்து நாடுகாணி வழியாக தேவாலா அட்டிக்கு சாலை செல்கிறது. இதன் குறுக்கே ஆற்று வாய்க்கால் செல்கிறது. இதனால் போக்குவரத்து வசதிக்காக வாய்க்கால் மீது பாலம் கட்டப்பட்டு இருந்தது.

கடந்த ஆண்டு கூடலூர் பகுதியில் தொடர் கனமழை பெய்தது. இதில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல இடங்களில் சிமெண்டு பாலங்கள் அடித்து செல்லப்பட்டது. இதேபோல் நாடுகாணியில் இருந்து தேவாலா அட்டிக்கு செல்லும் சாலையில் உள்ள பாலமும் உடைந்தது. இதனால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

புதுப்பிக்கப்படுமா? 

இதைத்தொடர்ந்து பாலத்தின் அடியில் சிமெண்ட் குழாயை சம்பந்தப்பட்ட துறையினர் பதித்தனர். தொடர்ந்து அதன் மீது இருபுறமும் மண்ணை நிரப்பினர். பின்னர் அந்த வழியாக போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. இந்த நிலையில் உடைந்துபோன பாலத்தை இதுவரை புதுப்பிக்கவில்லை. இதனால் அடிக்கடி வாகன விபத்துகளும் ஏற்படுகிறது.

மேலும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் அவசர தேவைகளுக்காக நோயாளிகள், கர்ப்பிணிகளை வாகனங்களில் வேகமாக கொண்டு செல்ல முடிவதில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உடைந்த பாலத்தை விரைவாக புதுப்பிக்கப்படுமா? என்று கிராம மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.


Next Story