மாவட்ட செய்திகள்

அமைச்சர் சரோஜா, கே.பி.பி.பாஸ்கர் தோல்வி:ராசிபுரம், நாமக்கல் தொகுதிகளை தி.மு.க. கைப்பற்றியது + "||" + minister saroja losed

அமைச்சர் சரோஜா, கே.பி.பி.பாஸ்கர் தோல்வி:ராசிபுரம், நாமக்கல் தொகுதிகளை தி.மு.க. கைப்பற்றியது

அமைச்சர் சரோஜா, கே.பி.பி.பாஸ்கர் தோல்வி:ராசிபுரம், நாமக்கல் தொகுதிகளை தி.மு.க. கைப்பற்றியது
அமைச்சர் சரோஜா, கே.பி.பி.பாஸ்கர் தோல்வி: ராசிபுரம், நாமக்கல் தொகுதிகளை தி.மு.க. கைப்பற்றியது
நாமக்கல்:
ராசிபுரம், நாமக்கல் தொகுதிகளை தி.மு.க. கைப்பற்றியது. இங்கு அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அமைச்சர் சரோஜா மற்றும் கே.பி.பி.பாஸ்கர் ஆகியோர் தோல்வி அடைந்தனர்.
தி.மு.க. வெற்றி
 நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் அமைச்சர் டாக்டர் சரோஜா, தி.மு.க. சார்பில் டாக்டர் மதிவேந்தன் உள்ளிட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதற்கிடையே நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் தொகுதியில் வாக்குகள் 24 சுற்றுகளாக எண்ணப்பட்டது. அதில் 4 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து அந்த 4 எந்திரங்களோடு இணைக்கப்பட்டிருந்த விவிபேட் எந்திரத்தில் இருந்த ஒப்புகைச்சீட்டை எடுத்து வாக்குகள் எண்ணப்பட்டன. அந்த வாக்குகளை, இதர சுற்றில் எண்ணப்பட்ட வாக்குகளோடு சேர்த்து இறுதி முடிவு அறிவிக்கப்பட்டது. 
அதில் அமைச்சர் சரோஜாவை 1,952 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் மதிவேந்தன் தோற்கடித்தார். ராசிபுரம் தொகுதியில் வெற்றிபெற்ற மதிவேந்தனுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் சக்திவேல் சான்றிதழை வழங்கினார்.
அதன்படி ராசிபுரம் தொகுதியில் பதிவான வாக்குகள் விவரம் வருமாறு:-
மொத்த ஓட்டுகள் - 2,36,524
பதிவானவை- 1,96,904
டாக்டர்.மதிவேந்தன் (தி.மு.க.) - 90,727
டாக்டர்.சரோஜா (அ.தி.மு.க.) - 88,775
அன்பழகன் (அ.ம.மு.க.) - 1,051
ராம்குமார் (ஐ.ஜே.கே.) - 1,133
சிலம்பரசி (நாம் தமிழர் கட்சி) - 11,295
நோட்டா - 2,110.
நாமக்கல் தொகுதி
நாமக்கல் சட்டசபை தொகுதியில் தி.மு.க. சார்பில் மாவட்ட துணை செயலாளர் ராமலிங்கம் போட்டியிட்டார். அ.தி.மு.க. சார்பில் கே.பி.பி.பாஸ்கர் எம்.எல்.ஏ. போட்டியிட்டார். அதில் தி.மு.க. வேட்பாளர் ராமலிங்கம், தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பாஸ்கரைவிட 27,861 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். 
நாமக்கல் சட்டசபை தொகுதியின் வாக்குகள் விவரம்:-
மொத்த ஓட்டுகள் - 2,57,771
பதிவானவை- 2,06,759
ராமலிங்கம் (தி.மு.க.) - 1,06,494
கே.பி.பி.பாஸ்கர் (அ.தி.மு.க.) - 78,633
செல்வி (தே.மு.தி.க.)- 972
ஆதம் பரூக் (மக்கள் நீதி மய்யம்) - 5,589
பாஸ்கர் (நாம் தமிழர் கட்சி) - 10,122
நோட்டா - 1,285.
நாமக்கல் தொகுதியில் வெற்றி பெற்ற ராமலிங்கத்துக்கு, தேர்தல் நடத்தும் அலுவலர் கோட்டைக்குமார் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார். அப்போது நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ராஜேஷ்குமார் மற்றும் தி.மு.க.வினர் உடனிருந்தனர்.
======