திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 தொகுதிகளை தி.மு.க. தக்கவைத்தது. மேலும் 2 தொகுதிகளை அ.தி.மு.க.விடமிருந்து கைப்பற்றியது. அ.தி.மு.க. 2 தொகுதிகளை பறிகொடுத்து, 2 தொகுதிகளில் வெற்றிபெற்றது.


திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 தொகுதிகளை தி.மு.க. தக்கவைத்தது. மேலும் 2 தொகுதிகளை அ.தி.மு.க.விடமிருந்து கைப்பற்றியது. அ.தி.மு.க. 2 தொகுதிகளை பறிகொடுத்து, 2 தொகுதிகளில் வெற்றிபெற்றது.
x
தினத்தந்தி 3 May 2021 12:54 PM GMT (Updated: 3 May 2021 12:54 PM GMT)

திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 தொகுதிகளை தி.மு.க. தக்கவைத்தது. மேலும் 2 தொகுதிகளை அ.தி.மு.க.விடமிருந்து கைப்பற்றியது. அ.தி.மு.க. 2 தொகுதிகளை பறிகொடுத்து, 2 தொகுதிகளில் வெற்றிபெற்றது.

திருவண்ணாமலை
வாக்கு எண்ணிக்கை 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 6-ந் தேதி நடந்தது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என 122 பேர் இந்த தேர்தலில் போட்டியிட்டனர். நேற்று முன்தினம் வாக்கு எண்ணிக்கை நடந்தது. 

திருவண்ணாமலை ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் திருவண்ணாமலை, செங்கம், கீழ்பென்னத்தூர், கலசபாக்கம் ஆகிய தொகுதிகளுக்கும், ஆரணி தாலுகா தச்சூர் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் ஆரணி, போளூர், செய்யாறு, வந்தவாசி ஆகிய தொகுதிகளுக்கும் வாக்குகள் எண்ணப்பட்டது.

தி.மு.க. தக்கவைத்தது

வாக்கு எண்ணிக்கை முடிவில் திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், வந்தவாசி, செய்யாறு, செங்கம், கலசபாக்கம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் தி.மு.க.வும், ஆரணி, போளூர் என 2 தொகுதிகளில் அ.தி.மு.க.வும் வெற்றி பெற்றது.

ஏற்கனவே 2016 சட்டமன்ற தேர்தலில் திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், செங்கம், போளூர், வந்தவாசி ஆகிய 5 தொகுதிகளில் தி.மு.க. வெற்றிபெற்றிருந்தது. அதில் இந்த தேர்தலில் போளூர் தொகுதியை தவிர மற்ற 4 தொகுதிகளிலும் மீண்டும் வெற்றிபெற்றுள்ளது. செய்யாறு, கலசபாக்கம் ஆகிய 2 தொகுதிகளை அ.தி.மு.க.விடமிருந்து கைப்பற்றியது.

அதேபோன்று கடந்த தேர்தலில் கலசபாக்கம், ஆரணி, செய்யாறு ஆகிய 3 தொகுதிகளில் வெற்றிபெற்றிருந்த அ.தி.மு.க. இந்த தேர்தலில் கலசபாக்கம், செய்யாறு ஆகிய 2 தொகுதிகளை பறிகொடுத்து, போளூர் தொகுதியை தி.மு.க.விடமிருந்து கைப்பற்றி உள்ளது. 

அதிக வாக்கு வித்தியாசம்

 திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு 94 ஆயிரத்து 673 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மாநில அளவில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்களில் 2-ம் இடத்தை பெற்றார். இவர் திருவண்ணாமலை தொகுதியில் 3-வது முறையாக வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியை பெற்று உள்ளார். ஏற்கனவே தண்டராம்பட்டு தொகுதியில் 3 முறை எம்.எல்.ஏ.வாகவும் இவர் இருந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கீழ்பென்னாத்தூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான கு.பிச்சாண்டி 2-வது முறையாக வெற்றி பெற்று உள்ளார். ஏற்கனவே திருவண்ணாமலை தொகுதியில் 4 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். செங்கம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் மு.பெ.கிரி தொடர்ந்து 2-வது முறையாக வெற்றி பெற்று உள்ளார். அதேபோல் வந்தவாசி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் அம்பேத்குமார் தொடர்ந்து 2-வது முறையாக வெற்றி பெற்று உள்ளார். கலசபாக்கம் மற்றும் செய்யாறு தொகுதிகளில் முதல் முறையாக களம் இறங்கிய தி.மு.க. வேட்பாளர்கள் பெ.சு.தி.சரவணனும், ஓ.ஜோதியும் வெற்றி பெற்று உள்ளனர்.

அ.தி.மு.க. 2 இடங்களில் வெற்றி

மேலும் ஆரணி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் 2-வது முறையாக வெற்றி பெற்று உள்ளார். போளூர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி வெற்றி பெற்று உள்ளார். இவர் ஏற்கனவே கலசபாக்கம் ெதாகுதியில் 2 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதியில் கடந்த முறை நடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த முறை 6 தொகுதிகளில் வெற்றி பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story