மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில்6 தொகுதிகளில் 107 வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பு + "||" + in thoothukudi district, 107 candidates deposit loss in 6 constituency

தூத்துக்குடி மாவட்டத்தில்6 தொகுதிகளில் 107 வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில்6 தொகுதிகளில் 107 வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பு
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 6 தொகுதிகளில் 107 வேட்பாளர்கள் டெபாசிட்டை இழந்துள்ளனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்ட 107 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.
சட்டமன்ற தேர்தல்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 120 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 
இதில் விளாத்திகுளம் தொகுதியில் 15 பேரும், தூத்துக்குடி தொகுதியில் 26 பேரும், திருச்செந்தூரில் 15 பேரும், ஸ்ரீவைகுண்டத்தில் 21 பேரும், ஓட்டப்பிடாரத்தில் 17 பேரும், கோவில்பட்டியில் 26 பேரும் போட்டியிட்டனர்.
டெபாசிட் இழப்பு
இதில் 107 வேட்பாளர்கள் டெபாசிட் தொகையை இழந்து உள்ளனர். தொகுதியில் பதிவான வாக்குகளில் 6-ல் ஒரு பங்கு வாக்குகளை பெற்று இருந்தால் டெபாசிட் தொகை
யை மீண்டும் பெற முடியும். ஆனால் கோவில்பட்டியில் 3 வேட்பாளர்கள் மற்ற தொகுதிகளில் தலா 2 வேட்பாளர்கள் ஆக மொத்தம் 13 பேர் மட்டுமே டெபாசிட் தொகையை மீண்டும் பெற்று உள்ளனர்.