மாவட்ட செய்திகள்

அண்ணன் இறந்த அதிர்ச்சியில் தம்பியும் சாவு + "||" + Brother dies in shock of brothers death

அண்ணன் இறந்த அதிர்ச்சியில் தம்பியும் சாவு

அண்ணன் இறந்த அதிர்ச்சியில் தம்பியும் சாவு
அண்ணன் இறந்த அதிர்ச்சியில் தம்பியும் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருமங்கலம்,மே.-
திருமங்கலம் அருகே உள்ள திரளி கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியகோட்டையன் (வயது 75). இவருடைய மனைவி பூச்சியம்மாள். இவர்கள் விவசாய தொழில் பார்த்து வந்தனர். பெரிய கோட்டையன் உடல் நலக்குறைவால் இறந்தார்.
இது குறித்து அவருடைய தம்பி செட்டிராமனுக்கு (72) தகவல் தெரிவிக்கப்பட்டது. அண்ணன் மேல் அளவுக்கதிகமான பாசம் வைத்திருந்த அவருக்கு அண்ணனின் இறப்பு கடும் அதிர்ச்சியை உண்டாக்கியது. வீட்டுக்கு வந்த செட்டி ராமன் அண்ணன் இறந்து கிடந்ததை பார்த்து துக்கம் தாளாமல் அழுது கொண்டிருந்தார். திடீரென மயங்கி விழுந்த அவர் உயிரிழந்தார். அண்ணன் இறந்த துக்கம் தாளாமல் தம்பியும் இறந்தது, அந்தக் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.