மாவட்ட செய்திகள்

கோவில்பட்டி, திருச்செந்தூர் தொகுதியில்3 எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படவில்லை + "||" + in kovilpatti, tiruchendur constituencies, the registered votes were not counted in 3 machines.

கோவில்பட்டி, திருச்செந்தூர் தொகுதியில்3 எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படவில்லை

கோவில்பட்டி, திருச்செந்தூர் தொகுதியில்3 எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படவில்லை
கோவில்பட்டி, திருச்செந்தூர் தொகுதியில் 3 எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படவில்லை.
தூத்துக்குடி:
கோவில்பட்டி, திருச்செந்தூர் தொகுதியில், மாதிரி வாக்குப்பதிவு ஓட்டுக்களை அழிக்காததால், 3 எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பிடவில்லை.
மாதிரி வாக்குப்பதிவு
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தூத்துக்குடி அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் கோவில்பட்டி தொகுதியில் 2 வாக்குச்சாவடிகளிலும், திருச்செந்தூர் தொகுதியில் ஒரு வாக்குச்சாவடியிலும் வாக்குப்பதிவின் போது, வாக்குப்பதிவு எந்திரத்தில் மாதிரி வாக்குப்பதிவின் போது போடப்பட்ட ஓட்டுக்கள் அழிக்கப்படாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 
வாக்குகள் எண்ணப்படவில்லை
கோவில்பட்டி தொகுதியில் உள்ள ஒவ்வொரு வாக்குப்பதிவு எந்திரத்திலும் சுமார் 600 வரை பதிவாகி இருந்ததாகவும், திருச்செந்தூர் தொகுதியில் உள்ள வாக்குப்பதிவு எந்திரத்தில் சுமார் 500 வாக்குகள் பதிவாகி இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் வெற்றி தோல்வி குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வரும் போது, இந்த வாக்குப்பதிவு எந்திரங்களில் உள்ள விவிபேட்டில் உள்ள ஒப்புகை சீட்டுகளை எண்ணுவதற்கு முடிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் வாக்கு வித்தியாசம் அதிகம் இருந்ததால், அந்த வாக்குப்பதிவு எந்திரங்களை எண்ணுவதற்கான தேவை எழவில்லை. இதனால் அந்த எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படவில்லை.