மாவட்ட செய்திகள்

தனியார் நிறுவன மேலாளரை கொன்ற விபசார கும்பலை சேர்ந்த 2 பேர் கைது + "||" + Killing a private company manager Two members of a prostitution gang have been arrested

தனியார் நிறுவன மேலாளரை கொன்ற விபசார கும்பலை சேர்ந்த 2 பேர் கைது

தனியார் நிறுவன மேலாளரை கொன்ற விபசார கும்பலை சேர்ந்த 2 பேர் கைது
தனியார் நிறுவன மேலாளரை கொன்ற விபசார கும்பலை சேர்ந்த 2 பேர் கைது
சரவணம்பட்டி

நகை, பணம் தர மறுத்ததால் தனியார் நிறுவன மேலாளரை கொலை செய்த விபசார கும்பலை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது

தனியார் நிறுவன மேலாளர்

கோவை சரவணம்பட்டியில் இருந்து துடியலூர் செல்லும் சாலை பாத்திமாநகர் பகுதியில் உள்ள காலி இடத்தில் கடந்த 24-ந் தேதி ஆண் பிணம் கிடந்தது. இது குறித்த தகவலின் பேரில் சரவணம்பட்டி போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது பிணமாக கிடந்தவரின் பேண்ட் பையில் 2 செல்போன்க ளும், கோவை திருச்சி சாலையில் உள்ள ஒரு நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்ப்பதற்கான அடையாள அட்டையும் இருந்தது. 


விசாரணையில் அந்த நபர் சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்த பால தண்டாயுதபாணி என்பவரது மகன் சாய்நாத் (48) என்பதும், இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகள்  இருப்பதும், சென்னையை தலைமையிடமாக கொண்ட கோவை நிறுவனத்தில் வேலை பார்த்ததும் தெரியவந்தது.

நகைகள் காணவில்லை

இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசார ணை நடத்தினர். பிரேத பரிசோதனை அறிக்கையில் சாய்நாத்தின் தலை யில் அடிபட்டு காயம் ஏற்பட்டதால் அவர் இறந்தது தெரிய வந்தது. 

இந்த நிலையில் சாய்நாத்தின் கழுத்தில் கிடந்த 3 பவுன் செயின், விரலில் இருந்த வைர மோதிரம் ஆகியவற்றை காண வில்லை என்று அவருடைய குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இதனால் நகைக்காக யாராவது அவரை அடித்து கொலை செய்தார் களா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வந்தனர். சாய்நாத்தின்  செல்போனில் யார் யாருடன் பேசினார் என்று தனிப்படை போலீசார் ஆய்வு செய்தனர். இதில், அவருடைய செல்போனில் விபசார கும்பல் ஒன்று தொடர்பு கொண்டு பேசிய பதிவுகள் கிடைத்தது.

அடித்துக் கொலை

அதன் பேரில் போலீசார் விசாரணையை துரிதப்படுத்திய போது, சாய்நாத், சரவணம்பட்டி பகுதியில் உள்ள ஒரு விபசார அழகியிடம் சென்று உல்லாசம் அனுபவித்து விட்டு வெளியே வந்துள்ளார். 

அப்போது அவரை விபசார கும்பலை சேர்ந்த 3 பேர் பின் தொடர்ந்து வந்து பணம், நகை கேட்டு மிரட்டி உள்ளனர். ஆனால் அவர் அதைதர மறுத்து உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் அவரை அடித்து கொலை செய்தது தெரிய வந்தது.

2 பேர் கைது

இதையடுத்து விபசார கும்பலை சேர்ந்த திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த ரவி என்பவரது மகன் விக்னேஷ் (வயது24), முசிறியை சேர்ந்த கருப்பையா என்பவரின் மகன் தரணிதரன் (24) மற்றும் இவர்களது நண்பர் ஒருவர் ஆகிய 3 பேர் சேர்ந்து சாய்நாத்தை அடித்து கொலை செய்தது தெரிய வந்தது.

இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விக்னேஷ், தரணிதரன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மற்றொருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.