மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி தொகுதியில்நாம் தமிழர் கட்சி வேட்பாளர்30,937 வாக்குகள் பெற்றார் + "||" + in thoothukudi constituency, the nam tamilar party candidate got 30,937 votes

தூத்துக்குடி தொகுதியில்நாம் தமிழர் கட்சி வேட்பாளர்30,937 வாக்குகள் பெற்றார்

தூத்துக்குடி தொகுதியில்நாம் தமிழர் கட்சி வேட்பாளர்30,937 வாக்குகள் பெற்றார்
தூத்துக்குடி தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 30,937 வாக்குகள் பெற்றார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் வேல்ராஜ் போட்டியிட்டார். இவர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் தீவிரமாக பங்கு பெற்று வந்தார். இவர் வாக்கு எண்ணிக்கை முடிவில் 30 ஆயிரத்து 937 வாக்குகளை பெற்று 3-வது இடத்தில் உள்ளார். 
இவருக்கு மடத்தூர், மீளவிட்டான், ஜார்ஜ் ரோடு, இந்திராநகர், லயன்ஸ்டவுன், தெற்கு காட்டன்ரோடு, ரோச்காலனி, குரூஸ்புரம், திரேஸ்புரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் கணிசமான வாக்குகள் கிடைத்து உள்ளன. இந்த பகுதியில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளரை விட அதிக ஓட்டுக்களை குவித்து உள்ளார். அதே போன்று திரேஸ்புரத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் தி.மு.க. வேட்பாளரையும் விட கூடுதலாக 10 ஓட்டுக்களை பெற்று உள்ளார். மேலும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 24.3 சதவீதம் ஓட்டுக்களை பெற்று உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக 16.42 சதவீதம் ஓட்டுக்களை வேல்ராஜ் பெற்று உள்ளார்.
இதே போன்று ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட வைகுண்டமாரி 22 ஆயிரத்து 413 ஓட்டுக்கள் பெற்று உள்ளார். இவர் பண்டாரம்பட்டி, சங்கரப்பேரி, முத்தம்மாள்காலனி, நடராஜன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கணிசமான வாக்குகளை பெற்று உள்ளார்.