மாவட்ட செய்திகள்

வாணியம்பாடி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ஜி.செந்தில்குமார் வெற்றி 3-வது முறையாக அ.தி.மு.க. கைப்பற்றியது + "||" + In Vaniyambadi constituency ADMK Candidate G. Senthilkumar wins

வாணியம்பாடி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ஜி.செந்தில்குமார் வெற்றி 3-வது முறையாக அ.தி.மு.க. கைப்பற்றியது

வாணியம்பாடி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ஜி.செந்தில்குமார் வெற்றி 3-வது முறையாக அ.தி.மு.க. கைப்பற்றியது
வாணியம்பாடி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ஜி.செந்தில்குமார் 5,023 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
வாணியம்பாடி,

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் ஜி.செந்தில்குமார், தி.மு.க. கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் என்.முஹம்மத் நயீம், ஓவைசி தலைமையிலான ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி சார்பில் டி.எஸ்.வகீல் அஹமத், மக்கள் நீதி மய்யம் சார்பில் எம்.ஞானதாஸ், நாம் தமிழர் கட்சி சார்பில் ஏ.ஜெ.தேவேந்திரன், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் டி.ராமு, அகில இந்திய இளைஞர் முன்னேற்றக் கட்சி சார்பில் ஆர்.சேகர், அகில பாரத இந்து மகா சபா சார்பில் பி.ெஜகன் மற்றும் சுயேச்ைசகள் உள்பட 13 பேர் போட்டியிட்டனர்.

இந்த தொகுதியில் பதிவான வாக்குகள் வாணியம்பாடி மருதர்கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் எண்ணப்பட்டன. தேர்தல் நடத்தும் அலுவலரும் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியருமான காயத்திரி சுப்பிரமணி முன்னிலையில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடந்தது. முதலில் தபால் ஓட்டுகளும், அடுத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டன. ெமாத்தம் 27 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடந்தது.

இதில் அ.தி.மு.க. வேட்பாளர் ஜி.செந்தில்குமார் 5 ஆயிரத்து 23 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:-

மொத்த வாக்குகள் -2,49,357.

பதிவான வாக்குகள்-1,88,399.

செல்லாதவை-405.

ஜி.செந்தில்குமார் (அ.தி.மு.க) -87,340.

என்.முஹம்மத் நயீம் (இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்) -82,317.

ஏ.ஜெ.தேவேந்திரன் (நாம் தமிழர் கட்சி) -11,151,

டி.எஸ்.வகீல் அஹமத் (ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி) -1,895.

எம்.ஞானதாஸ் (மக்கள் நீதி மய்யம்) -1,843.

டி.ராமு (சுயே) -715.

எம்.சுரேஷ் (சுயே) -360.

பி.ஜெகன் (சுயே) -350.

பி.அப்துல்வாகித் (சுயே) -259.

சி.எம். முகமதுஉசைன் (சுயே) -186.

டில்லிராஜி (சுயே) -184.

ஆர்.சேகர் (சுயே) -176.

சையத்முகமது சலீம் (சுயே) -133.

நோட்டா-1,492.

3-வது முறையாக...

இதன் மூலம் அ.தி.மு.க. வேட்பாளர் ஜி.செந்தில்குமார் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளரை விட 5,023 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

வாணியம்பாடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் ஜி.செந்தில்குமாருக்கு, வெற்றி சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலர் காயத்திரி சுப்பிரமணி வழங்கினார். வாணியம்பாடி தொகுதியை அ.தி.மு.க. தொடர்ந்து 3-வது முறையாக கைப்பற்றி உள்ளது.