மாவட்ட செய்திகள்

அரக்கோணம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் சு.ரவி வெற்றி 3-வது முறையாக தொகுதியை தக்கவைத்தார் + "||" + In the Arakkonam Assembly constituency ADMK Candidate Su.Ravi wins

அரக்கோணம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் சு.ரவி வெற்றி 3-வது முறையாக தொகுதியை தக்கவைத்தார்

அரக்கோணம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் சு.ரவி வெற்றி 3-வது முறையாக தொகுதியை தக்கவைத்தார்
அரக்கோணம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க.வேட்பாளர் சு.ரவி வெற்றிபெற்றுள்ளார். இவர் இந்த தொகுதியில் தொடர்ந்து 3-வது முறையாக வெற்றிபெற்றுள்ளார்.
ராணிப்பேட்டை,

தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 6-ந் தேதி நடந்தது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் சு.ரவி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஜா.கவுதமசன்னா, நாம் தமிழர் கட்சி சார்பில் எ.அபிராமி எழில், அ.ம.மு.க. சார்பில் கே.சி.மணிவண்ணன் உள்பட 13 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

அரக்கோணம் தொகுதியில் பதிவான வாக்குகள் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் எண்ணப்பட்டன. வாக்குகள் எண்ணும் பணி ேநற்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், தேர்தல் பொதுப் பார்வையாளர்கள், காவல் பார்வையாளர் ஆகியோர் முன்னிலையில், பாதுகாப்பு அறை‌யில் இருந்து தபால் வாக்குப்பெட்டிகள், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஆகியவற்ைற வாக்கு எண்ணும் மையத்துக்கு எடுத்து வரப்பட்டது.

அங்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவதாஸ் முன்னிலையில் வாக்குகள் எண்ணப்பட்டது. வாக்கு எண்ணிக்கை 23 சுற்றுகளாக நடந்தது. வாக்கு எண்ணிக்கை முடிவில் அ.தி.மு.க. வேட்பாளர் சு.ரவி வெற்றிபெற்றார்.

வாக்குகள் விவரம் வருமாறு:-

வாக்குகள் விவரம்

மொத்த வாக்குகள் - 2,26,511

பதிவானவை - 1,71,417

செல்லாதவை- 5

சு.ரவி (அ.தி.மு.க.) - 85,399

ஜா.கவுதமசன்னா (வி.சி.க.).- 58,230

எ.அபிராமி எழில் (நாம் தமிழர் கட்சி) - 14,631

கே.சி.மணிவண்ணன் (அ.ம.மு.க.)- 4,777

பா.சுதாகர் (பகுஜன் சமாஜ் கட்சி)- 1,825

சு.பாஸ்கரன் (மக்கள் நீதி மய்யம்) - 3,543

பொ.ரவி (சுயே) - 432

சி.மோ.கவுதமன் (சுயே) - 285

மு.மதன்ராஜ் (சுயே) - 184

சி.மோகன் (சுயே) - 128

மு.மணிகண்டன் (சுயே) - 113

ஆகவுதமன் (சுயே) - 112

வி.ரவி (சுயே) - 97

நோட்டா- 1656

3-வது முறையாக

வாக்கு எண்ணிக்கை முடிவில் அ.தி.மு.க.வேட்பாளர் சு.ரவி வெற்றிபெற்றார். இவர் தன்னை எதிர்த்து தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜா.கவுதமசன்னாவை விட 27,169 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

அவர் வெற்றிபெற்றதற்கான சான்றிதழை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவதாஸ் வழங்கினார். அரக்கோணம் தொகுதியில் வெற்றிபெற்றுள்ள சு.ரவி ஏற்கனவே 2 முறை இந்த தொகுதியில் வெற்றிபெற்றுள்ளார். இந்த தேர்தலிலும் அவர் வெற்றிபெற்று தொடர்ந்து 3-வது முறையாக தொகுதியை தக்கவைத்துள்ளார்.