மாவட்ட செய்திகள்

பெண்ணுக்கு கொலை மிரட்டல்2 வாலிபர்கள் கைது + "||" + woman receives death threat, 2 teenagers arrested

பெண்ணுக்கு கொலை மிரட்டல்2 வாலிபர்கள் கைது

பெண்ணுக்கு கொலை மிரட்டல்2 வாலிபர்கள் கைது
பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஸ்ரீீவைகுண்டம்:
செய்துங்கநல்லூர் அருகே உள்ள அராபத் நகர் பகுதியை சேர்ந்த முனியாண்டி மனைவி கண்ணம்மாள் (வயது 32) . இவர், தனது வீட்டின் அருகில் உள்ள புறம்போக்கு நிலத்தில் மாட்டுத் தொழுவம் கட்டி வந்துள்ளார்.
இந்நிலையில் கோவில்பத்து பகுதியை சேர்ந்த முருகன் மகன் சுந்தர் (26), தேவராஜ் மகன் லட்சுமணன் பாண்டி (25), ஆகியோர் கண்ணம்மாளிடம் தகராறு செய்து அவதூறாக பேசியுள்ளனர். மேலும்,  கண்ணம்மா வீட்டில் மாட்டுத்தொழுவம் கட்ட கட்டிட வேலை பார்த்து வந்த கோவில்பத்து பகுதியை சேர்ந்த அருணாச்சலம் மகன் சோமசுந்தரம் (36) என்பவரை செங்கல்லால் தாக்கி, மாட்டுத் தொழுவ சுவரை உடைத்து, கண்ணம்மாளுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கண்ணம்மாள் அளித்த புகாரின் பேரில் செய்துங்கநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி திலீப் வழக்கு பதிவு செய்து சுந்தர் உள்ளிட்ட 2 பேரையும் கைது செய்தார்.