மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறைக்கு கொண்டு செல்லப்பட்டன


மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறைக்கு கொண்டு செல்லப்பட்டன
x
தினத்தந்தி 3 May 2021 3:21 PM GMT (Updated: 3 May 2021 3:21 PM GMT)

நாகையில், வாக்கு எண்ணிக்கை முடிந்ததை தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறைக்கு கொண்டு செல்லப்பட்டன.

நாகப்பட்டினம்:
நாகையில், வாக்கு எண்ணிக்கை முடிந்ததை தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறைக்கு கொண்டு செல்லப்பட்டன.
வாக்கு எண்ணிக்கை
நாகை மாவட்டத்தில் நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம் ஆகிய 3 சட்டசபை தொகுதிகள் உள்ளன. கடந்த 6-ந்தேதி நடைபெற்ற சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவுக்கு பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் நாகை இ.ஜி.எஸ். பிள்ளை கல்லூரியில் வைக்கப்பட்டு 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 
இந்த நிலையில் நேற்று முன்தினம் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.3 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணி முடிந்தவுடன் மீண்டும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மீண்டும் வாக்கு எண்ணும் மையத்தின் பாதுகாப்பு அறையில் அடுக்கி வைக்கப்பட்டன. 
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்
இதை தொடர்்ந்து நேற்று வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து 3 தொகுதிக்குட்பட்ட 8,300 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ‘சீல்’ வைக்கப்பட்டது. இவை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கண்காணிப்பில், வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன், நாகையில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திர பாதுகாப்பு  அறைக்கு  கொண்டு செல்லப்பட்டன.

Next Story