தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பாதித்த 204 பகுதிகள் கண்காணிப்பு


தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பாதித்த 204 பகுதிகள் கண்காணிப்பு
x
தினத்தந்தி 3 May 2021 3:24 PM GMT (Updated: 3 May 2021 3:24 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் உள்ள 204 பகுதிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் உள்ள பகுதிகள் நுண் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவித்து கண்காணக்கப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ்
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனாலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து 500-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் கொரோனா தடுப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.
நுண்கட்டுப்பாட்டு மண்டலம்
அதன்படி மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் உள்ள பகுதிகள் நுண் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி புறநகர் பகுதியில் 11 மண்டலமும், வல்லநாடு வட்டாரத்தில் 4 மண்டலமும், ஸ்ரீவைகுண்டம் வட்டாரத்தில் 22 மண்டலமும், ஆழ்வார்திருநகரி வட்டாரத்தில் 4 மண்டலமும், திருச்செந்தூர் வட்டாரத்தில் 2 மண்டலமும், உடன்குடி வட்டாரத்தில் ஒரு மண்டலமும், சாத்தான்குளம் வட்டாரத்தில் 9 மண்டலமும், கோவில்பட்டி வட்டாரத்தில் 89 மண்டலமும், ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் 13 மண்டலமும், புதூர் வட்டாரத்தில் 6 மண்டலமும், கயத்தார் வட்டாரத்தில் 31 மண்டலமும், விளாத்திகுளம் வட்டாரத்தில் 12 மண்டலமும் ஆக மொத்தம் 204 மண்டலங்களாக அறிவித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
கிருமிநாசினி தெளிப்பு
இந்த பகுதியில் சுகாதார பணியாளர்கள் கிருமி நாசினி தெளிப்பது, கபசுர குடிநீர் வழங்குவது மற்றும் காய்ச்சல் முகாம்கள் நடத்துவது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து நோய் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர்.

Next Story