மாவட்ட செய்திகள்

பள்ளிகொண்டா அருகே மகன் இறந்த அதிர்ச்சியில், தந்தையின் உயிரும் பிரிந்தது + "||" + In the shock of the son's death, the father's life was cut short

பள்ளிகொண்டா அருகே மகன் இறந்த அதிர்ச்சியில், தந்தையின் உயிரும் பிரிந்தது

பள்ளிகொண்டா அருகே மகன் இறந்த அதிர்ச்சியில், தந்தையின் உயிரும் பிரிந்தது
பள்ளிகொண்டா அருகே மகன் இறந்த அதிர்ச்சியில் தந்தையும் பலியானார். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அணைக்கட்டு

உடல்நலமின்றி இறந்தார்

அணைக்கட்டு தாலுகா பள்ளிகொண்டாவை அடுத்த வேப்பங்கால் பகுதியை சேர்ந்தவர் வேணுகோபால் (வயது 80). இவரது மகன் சீனிவாசன் (45). இவர் குடியாத்தம் ரோட்டில் இரண்டு சக்கர வாகனம் பழுது பார்க்கும் கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் சீனிவாசன் கடந்த சில தினங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பு சீனிவாசனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு உடனடியாக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

 தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 5 மணிக்கு இறந்துவிட்டார். சீனிவாசன் இறந்த தகவலை அவரது குடும்பத்தினருக்கு டாக்டர்கள் தகவல் தெரிவித்தனர். இதை கேட்ட  சீனிவாசனின் தந்தை வேணுகோபால் அதிர்ச்சியடைந்து சோகத்தில் இருந்தார். 

அதிர்ச்சியில் தந்தையும் சாவு

சிறிதுநேரத்தில் திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். அதைத்தொடர்ந்து தந்தை, மகன் ஆகிய இருவரின் உடல்களையும் ஒரே நேரத்தில் அ’க்கம் செய்யப்பட்டது. 

மருத்துவமனையில் இறந்த மகனின் உடல் வீட்டுக்கு வருவதற்குள் தந்தை இறந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.