மாவட்ட செய்திகள்

ராணிப்பேட்டையில் கலெக்டர் அலுவலகம் கட்டும் இடத்தில் வடமாநில தொழிலாளி சாவு + "||" + Northland worker death

ராணிப்பேட்டையில் கலெக்டர் அலுவலகம் கட்டும் இடத்தில் வடமாநில தொழிலாளி சாவு

ராணிப்பேட்டையில் கலெக்டர் அலுவலகம் கட்டும் இடத்தில் வடமாநில தொழிலாளி சாவு
ராணிப்பேட்டையில் கலெக்டர் அலுவலகம் கட்டும் இடத்தில் வடமாநில தொழிலாளி சாவு
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில் புதிய கலெக்டர் அலுவலகம் கட்டும் பணி, எம்.பி.டி.சாலையில் பாரதி நகர் அருகே நடைபெற்று வருகிறது. கட்டுமான பணியில் மேற்கு வங்காள மாநிலம், கொடா பகுதியை சேர்ந்த ஜோக்கர் முர்மு (வயது 30) என்ற கட்டிட தொழிலாளியும் வேலை பார்த்து வந்தார். இவர் அங்கேயே மற்ற தொழிலாளர்களுடன் தங்கி வேலை பார்த்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ஜோக்கர் முர்மு தூங்கியுள்ளார். நேற்று காலை அவரது மாமா பிஷா மார்டி என்பவர் ஜோக்கர் முர்முவை எழுப்பியபோது, அவர் இறந்திருந்தது தெரியவந்தது. 

இதுகுறித்து ராணிப்பேட்டை காரை நிர்வாக அலுவலர் கதிரேசன் அளித்த புகாரின் பேரில், ராணிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கட்டிட தொழிலாளியின் உடலை கைப்பற்றி, வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.