மாவட்ட செய்திகள்

கோவில்பட்டியில் 3வது முறையாக வெற்றிகடம்பூர் ராஜூவுக்கு கட்சி நிரவாகிகள் வாழ்த்து + "||" + 3rd time victory in kovilpatti, party executives congratulate kadampur raju

கோவில்பட்டியில் 3வது முறையாக வெற்றிகடம்பூர் ராஜூவுக்கு கட்சி நிரவாகிகள் வாழ்த்து

கோவில்பட்டியில் 3வது முறையாக வெற்றிகடம்பூர் ராஜூவுக்கு கட்சி நிரவாகிகள் வாழ்த்து
கோவில்பட்டி தொகுதியில் 3வது முறையாக வெற்றிபெற்ற கடம்பூர் ராஜூவுக்கு கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடர்ந்து 3-வது முறையாக வெற்றி பெற்றார். இதையடுத்து கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு ஒன்றிய செயலாளர் அன்புராஜ் தலைமையில், அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆபிரகாம் அய்யாதுரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் கடம்பூரில் உள்ள கடம்பூர் ராஜூவின் வீட்டுக்கு சென்று அ.தி.மு.க. நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் செல்வகுமார், மேற்கு ஒன்றிய செயலாளர் வினோபாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.