மாவட்ட செய்திகள்

தஞ்சை மாவட்டத்தில் 7 தொகுதிகளில் தி.மு.க. வெற்றி + "||" + In Tanjore district DMK in 7 constituencies Success

தஞ்சை மாவட்டத்தில் 7 தொகுதிகளில் தி.மு.க. வெற்றி

தஞ்சை மாவட்டத்தில் 7 தொகுதிகளில் தி.மு.க. வெற்றி
தஞ்சை மாவட்டத்தில், 7 தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெற்றது. இதில் திருவையாறு, கும்பகோணம், திருவிடைமருதூர், தஞ்சை தொகுதிகளை மீண்டும் தி.மு.க. கைப்பற்றி உள்ளது.
தஞ்சாவூர், 

தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய 8 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை நேற்று நடந்தது.

தஞ்சை, திருவையாறு, ஒரத்தநாடு தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை தஞ்சை குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரியிலும், பட்டு்கோட்ைட, பேராவூரணி தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரியிலும் நடந்தது. வாக்கு எண்ணிக்கை முடிவில் ஒரத்தநாடு தொகுதி தவிர மற்ற 7 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற்றது.

பேராவூரணி

பேராவூரணி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் என்.அசோக்குமார் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளரை விட 23,503 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவர் பெற்ற வாக்குகள் 89,130 இவருக்கு அடுத்தபடியாக அ.தி.மு.க. வேட்பாளர் திருஞானசம்பந்தம் 65,627 வாக்குகள் பெற்றுள்ளார்.

வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:-

பதிவான வாக்குகள் - 1,70,896

அசோக்குமார்(தி.மு.க.) - 89,130

திருஞானசம்பந்தம்(அ.தி.மு.க.) - 65,627

திலீபன்(நாம் தமிழர்) - 12,154

சிவக்குமார்(தே.மு.தி.க.) - 1,623

பச்சமுத்து(ஐ.ஜே.கே.) - 554

துரைராஜ்(பகுஜன் சமாஜ்) - 494

உதயகுமார்(சுயே) - 262

இளங்கோவன்(சுயே) - 236

நோட்டா - 770

செல்லாதவை - 46.

கும்பகோணம்

கும்பகோணம் ெதாகுதியில் தி.மு.க. வேட்பாளர் அன்பழகன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளரை விட 21 ஆயிரத்து 42 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தி.மு.க. வேட்பாளர் அன்பழகன் பெற்ற வாக்குகள் 95,533. இவருக்கு அடுத்தபடியாக அ.தி.மு.க. வேட்பாளர் ஸ்ரீதர்வாண்டையார் 74,491 வாக்குகள் பெற்றுள்ளார்.

வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:-

பதிவான வாக்குகள்-- 1,96, 724

அன்பழகன்(தி.மு.க.)- 95,533

ஸ்ரீதர்வாண்டையார்(அ.தி.மு.க.)-- 74,491

ஆனந்த்(நாம்தமிழர்)- 12,440

பாலமுருகன்(அ.ம.ம.க.)- 6407

கோபாலகிருஷ்ணன்(மக்கள் நீதி மய்யம்)- 5240

குருமூர்த்தி(சுயே)- 230

அய்யப்பன்(சுயே)- 209

விஜயகுமார்(சுயே)- 188

சுப்பிரமணியன்(சுயே)- 152

பிரகாஷ்(அகில பாரத இந்து மகாசபா)-119

நோட்டா- 1,639

செல்லாதவை- 76

பாபநாசம்

பாபநாசம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஜவாஹிருல்லா தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் கோபிநாதனை விட 16 ஆயிரத்து 145 வாக்குகள் அதிகம் பெற்று ெவற்றி பெற்று உள்ளார். ஜவாஹிருல்லா பெற்ற வாக்குகள் 86,256. இவருக்கு அடுத்தபடியாக அ.தி.மு.க. வேட்பாளர் கோபிநாதன் 70,111 வாக்குகள் பெற்றுள்ளார்.

வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:-

பதிவானவை - 1,96,128

ஜவாஹிருல்லா(தி.மு.க.)- 86,256

கோபிநாதன்(அ.தி.மு.க.)- 70,111

ரெங்கசாமி(அ.ம.மு.க.)- 19,405

கிருஷ்ணகுமார்(நாம் தமிழர் கட்சி)- 14,655

சாந்தா(மக்கள் நீதி மய்யம்)- 2021

கோபிநாதன்(சுயே)- 567

ராஜா(சுயே)- 474

எம்.ராஜா(சுயே)- 410

முத்துக்குமார்(அனைத்து மக்கள் புரட்சி கட்சி)- 251

கோபி(சுயே)- 208

மகராஜ்பானு(அனைத்து இந்திய ஜனநாயக மக்கள் கழகம்)- 165

சேவியர்(சுயே)- 161

தியாகராஜன்(சுயே)- 132

நோட்டா - 1,197

செல்லாதவை- 115

பட்டுக்கோட்டை

பட்டுக்கோட்டை சட்டசபை தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் அண்ணாத்துரை தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் என்.ஆர்.ரெங்கராஜனை விட 25 ஆயிரத்து 269 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்று உள்ளார். தி.மு.க. வேட்பாளர் அண்ணாத்துரை பெற்ற வாக்குகள்- 79,065. இவருக்கு அடுத்தபடியாக அ.தி.மு.க. வேட்பாளர் என்.ஆர்.ரெங்கராஜன் 53,796 வாக்குகள் பெற்று உள்ளார்.

வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:-

பதிவானவை - 1,77550

அண்ணாத்்துரை(தி.மு.க.)- 79,065

என்.ஆர்.ரெங்கராஜன்(அ.தி.மு.க.)- 53,796

பாலகிருஷ்ணன்(சுயே)- 23,771

கீர்த்திகாஅன்பு (நாம்தமிழர் கட்சி)- 10,730

எஸ்.டி.எஸ்.செல்வம்(அ.ம.மு.க.)- 5,223

சதாசிவம்(மக்கள் நீதி மய்யம்)- 3,088

மெய்கப்பன்(அண்ணாதிராவிட கட்சி)- 322

சுந்தரராஜ்(அனைத்து மக்கள் புரட்சி கட்சி)- 179

நோட்டா- 1026

செல்லாதவை - 350

தஞ்சாவூர்

தஞ்சை சட்டசபை தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் டி.கே.ஜி.நீலமேகம் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் அறிவுடைநம்பியை விட 47 ஆயிரத்து 149 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்று உள்ளார். தி.மு.க. வேட்பாளர் டி.கே.ஜி.நீலமேகம் பெற்ற வாக்குகள் 1,03,772. அ.தி.மு.க. வேட்பாளர் அறிவுடைநம்பி 56623 வாக்குகள் பெற்று உள்ளார்.

பதிவானவை- 1,94,976

செல்லாதவை-117

1.நீலமேகம் (தி.மு.க.)- 1,03,772

2.அறிவுடைநம்பி (அ.தி.மு.க.) -56,623

3.சுபாதேவி (நாம் தமிழர் கட்சி)- 17,366

4.சுந்தரமோகன் (மக்கள் நீதி மய்யம்)- 9,681

5.ராமநாதன் (தே.மு.தி.க.)- 4,246

6. கரிகாலசோழன் (தேசியவாத காங்கிரஸ்)- 281

7.வாசுகி (சுயேச்சை)-260

8.சேவியர் (சுயேச்சை)-217

9.தினேஷ்பாபு (சுயேச்சை)-142

10.சந்தோஷ் (சுயேச்சை) -122

11.பரத் (சுயேச்சை)-110

12.சப்தகிரி (சுயேச்சை) -101

நோட்டா-1,938

திருவிடைமருதூர்

திருவிடைமருதூர் சட்டசபை தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் கோவி.செழியன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் யூனியன்வீரமணியை விட 10,860 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்று உள்ளார். தி.மு.க. வேட்பாளர் கோவி.செழியன் பெற்ற வாக்குகள் 95,763. அ.தி.மு.க. வேட்பாளர் யூனியன் வீரமணி 85083 வாக்குகள் பெற்று உள்ளார்.

வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:-

பதிவானவை--1,98,592

கோவி.செழியன்(தி.மு.க.)- 95,763

யூனியன் வீரமணி(அ.தி.மு.க.)- 85083

திவ்யபாரதி(நாம்தமிழர் கட்சி)- 11,176

புரட்சிமணி(பகுஜன்சமாஜ்)- 1839

குடந்தை அரசன்(அ.ம.மு.க.)- 1746

கண்ணையன்(மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு)- 576

மாரிமுத்து(சுேய)- 245

மதன்குமார்(இந்திய ஜனதா கட்சி)-226

மாரியப்பன்(சுயே)- 198

மதி(சுயே)- 102

சுரேஷ்(அனைத்து மக்கள் புரட்சி கழகம்)- 78

கண்ணையன்(சுயே)- 68

நெடுமாறன்(சுயே)- 68

தனசேகர்(சுயே)- 38

நோட்டா- 1240

செல்லாதவை- 146

திருவையாறு

திருவையாறு சட்டசபை தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் துரை.சந்திரசேகரன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளர் பூண்டி வெங்கடேசனை விட 53,650 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்று உள்ளார். தி.மு.க. வேட்பாளர் துரை.சந்திரசேகரன் பெற்ற வாக்குகள் 103210. பா.ஜனதா. வேட்பாளர் பூண்டி.வெங்கடேசன் 49560 வாக்குகள் பெற்று உள்ளார்.

வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:-

மொத்த வாக்காளர்கள் 1,68,353

பதிவானவை - 2,11,962

துரைசந்திரசேகரன் (தி.மு.க.)- 103210

வெங்கடேசன் (பா.ஜனதா)- 49560

ேலுகார்த்திகேயன் (அ.ம.மு.க.)- 37469

செந்தில்நாதன் (நாம் தமிழர் கட்சி)-15820

உத்திரபாதி (புதிய தமிழகம்)-1215

திருமாறன் (இந்திய ஜனநாயக கட்சி)- 1093

அஸ்வின் (சுயே)-530

ராஜ்குமார் (சுயே) 368

விஜயகுமார் (சுயே) 257

பாக்கியராஜ் (சுயே) 252

சிங்காரவடிவேல் (சுயே) 240

சிவராமன் (சுயே) 236

நோட்டா -1180

செல்லாதவை - 532

அ.ம.மு.க., ம.நீ.ம. வேட்பாளர்களை விட அதிகவாக்குகள் பெற்ற சுயேச்சை வேட்பாளர் பட்டுக்கோட்டை சட்டசபை தொகுதியில் தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், அ.ம.மு.க., அண்ணா திராவிட கட்சி, அனைத்து மக்கள் புரட்சி கட்சி ஆகிய வேட்பாளர்களுடன் சுயேச்சை வேட்பாளராக பாலகிருஷ்ணன் களமிறங்கினார். அவர் 23 ஆயிரத்து 271 வாக்குகள் பெற்று தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு அடுத்தபடியாக 3-வது இடத்தை பிடித்துள்ளார். அவர், அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களை விட அதிக வாக்குகள் பெற்றுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. தஞ்சை மாவட்டத்தில், இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தஞ்சை மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு நேற்று முதல் அமலானது. கண்காணிப்பு பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர்.
2. தஞ்சை மாவட்டத்தில் மேலும் 15 கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு
தஞ்சையில் கொரோனா பாதித்த கல்லூரி மாணவர்கள் எண்ணிக்கை 53ஆக உயர்ந்துள்ளது.
3. தஞ்சை மாவட்டத்தில் 2 பள்ளிகளில் மேலும் 14 பேருக்கு கொரோனா
தஞ்சை மாவட்டத்தில் 2 பள்ளிகளில் 13 மாணவர்கள், ஒரு ஆசிரியருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.