மாவட்ட செய்திகள்

விபத்தில் அரசு பஸ் கண்டக்டர் பலி + "||" + Government bus conductor killed in accident

விபத்தில் அரசு பஸ் கண்டக்டர் பலி

விபத்தில் அரசு பஸ் கண்டக்டர் பலி
விபத்தில் அரசு பஸ் கண்டக்டர் பலியானார்
மேலூர்,மே.-
மேலூர் அருகே உள்ள தும்பைப்பட்டியைச் சேர்ந்தவர் வீரையா (வயது 45). மேலூர் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் கண்டக்டராக வேலை பார்த்து வந்தார். இவர் வேலை முடிந்து இருசக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்தார். பின்னர் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். 
இது குறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் கீழவளவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.