திருச்செங்கோடு, சேந்தமங்கலம் தொகுதிகளை தி.மு.க. கைப்பற்றியது 2 எம்.எல்.ஏ.க்கள் தோல்வி


திருச்செங்கோடு, சேந்தமங்கலம் தொகுதிகளை தி.மு.க. கைப்பற்றியது 2 எம்.எல்.ஏ.க்கள் தோல்வி
x
தினத்தந்தி 3 May 2021 4:57 PM GMT (Updated: 3 May 2021 4:57 PM GMT)

திருச்செங்கோடு, சேந்தமங்கலம் தொகுதிகளில் தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். அவர்களை எதிர்த்து போட்டியிட்ட 2 எம்.எல்.ஏ.க்கள் தோல்வி அடைந்தனர்.

நாமக்கல், 

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் பொன்.சரஸ்வதி. இவருக்கு தற்போது நடந்த சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க. தலைமை சீட் வழங்கியது.

அவரை எதிர்த்து தி.மு.க. சின்னத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் போட்டியிட்டார். இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. அதில் கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரன் 2,862 வாக்குகள் வித்தியாசத்தில் பொன்.சரஸ்வதி எம்.எல்.ஏ.வை தோற்கடித்தார்.

இதனிடையே சேந்தமங்கலம் சட்டசபை தொகுதியில் தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னுசாமி போட்டியிட்டார். அ.தி.மு.க. சார்பில் சந்திரன் போட்டியிட்டார். அ.தி.மு.க.வில் கடந்த முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட சந்திரசேகரனுக்கு சீட் மறுக்கப்பட்டது. இதனால் அவர் சுயேச்சையாக போட்டியிட்டார்.

அதில் தி.மு.க. வேட்பாளர் பொன்னுசாமி, 10,493 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளரை தோற்கடித்தார். மேலும் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட எம்.எல்.ஏ. சந்திரசேகரனுக்கு 11,371 வாக்குகள் மட்டுமே கிடைத்தது.

இரு தொகுதிகளில் பதிவான வாக்குகளின் விவரம் வருமாறு:-

சேந்தமங்கலம் (தி.மு.க. வெற்றி)

மொத்த ஓட்டுகள் - 2,43,457

பதிவானவை- 1,99,235

பொன்னுசாமி

(தி.மு.க.) - 90,681

எஸ்.சந்திரன்

(அ.தி.மு.க.) - 80,188

பி.சந்திரன் (அ.ம.மு.க.) - 831

செல்வராஜ்

(ஐ.ஜே.கே.) - 431

சந்திரசேகரன் எம்.எல்.ஏ. (சுயேச்சை) - 11,654

நோட்டா - 2,058

திருச்செங்கோடு (தி.மு.க. வெற்றி)

மொத்த ஓட்டுகள் - 2,31,100

பதிவானவை- 1,84,669

ஈ.ஆர்.ஈஸ்வரன்

(தி.மு.க.) - 81,688

பொன்.சரஸ்வதி

(அ.தி.மு.க.) - 78,826

ஹேமலதா

(அ.ம.மு.க.) - 449

ஜனகராஜ் (மக்கள் நீதி

மய்யம்) - 3,724

நடராஜன் (நாம் தமிழர் கட்சி) - 13,967

நோட்டா - 1,518

சேந்தமங்கலம் மற்றும் பரமத்திவேலூர் தொகுதிகளில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர்களை தவிர அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.

சான்றிதழ்

இதனிடையே திருச்செங்கோடு தொகுதியில் வெற்றி பெற்ற கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரனுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் மணிராஜூம், சேந்தமங்கலம் தொகுதியில் வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர் பொன்னுசாமிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் ரமேசும் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களை வழங்கினர்.

Next Story