வாரச்சந்தையில் காய்கறிகளை வாங்க குவிந்த மக்கள்


வாரச்சந்தையில் காய்கறிகளை வாங்க குவிந்த மக்கள்
x
தினத்தந்தி 3 May 2021 5:23 PM GMT (Updated: 3 May 2021 5:23 PM GMT)

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் வாரச்சந்தையில் பொதுமக்கள் குவிந்தனர்.

திண்டுக்கல்: 

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியில் வாரந்தோறும் திங்கட்கிழமை வாரச்சந்தை நடைபெறுவது வழக்கமாகும். 

அதன்படி நேற்று பட்டிவீரன்பட்டியில் வாரச்சந்தை நடைபெற்றது. 

இந்த வாரச்சந்தையில் காய்கறி, மளிகை உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்காக பட்டிவீரன்பட்டியை சுற்றியுள்ள அய்யன்கோட்டை, புதூர், தேவரப்பன்பட்டி, காந்திபுரம், வாடிப்பட்டி உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். 

தற்போது கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. பட்டிவீரன்பட்டி பகுதியில் கடந்த மாதம் பலர்  கொரோனா பாதிப்பிற்கு உள்ளானார்கள்.

 இந்நிலையில் நேற்று நடைபெற்ற இந்த வாரச்சந்தையில் கொரோனா விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டபடி சமூக இடைவெளி இன்றியும், முக கவசம் அணியாமலும் பொதுமக்கள் காய்கறிகளை வாங்கி சென்றனர்.

 இனிவரும் வாரங்களில் நடைபெறும் வாரச்சந்தையில் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிந்து பொருட்களை வாங்க பொதுமக்களிடம் சம்பந்தபட்ட அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story