மாவட்ட செய்திகள்

பஸ் நிறுத்தத்தில் இறந்து கிடந்த பெண் + "||" + Woman lying dead at bus stop

பஸ் நிறுத்தத்தில் இறந்து கிடந்த பெண்

பஸ் நிறுத்தத்தில் இறந்து கிடந்த பெண்
திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தையம் அருகே பஸ் நிறுத்தத்தில் பெண் ஒருவர் இறந்து கிடந்தார்.
திண்டுக்கல்: 

திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தையம் அருகே தாராபுரம்-ஒட்டன்சத்திரம் சாலையில் கருப்பதேவன்பட்டி பஸ் நிறுத்தம் அருகே 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நேற்று முன்தினம் இறந்துகிடந்தார். 

ஆனால் அவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. மேலும் அவர் எவ்வாறு இறந்தார்? என்ற விவரம் தெரியவில்லை. 

இதுகுறித்து தகவல் அறிந்த கள்ளிமந்தையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.