மாவட்ட செய்திகள்

களக்காடு அருகேமாணவன் விஷம் குடித்து தற்கொலை + "||" + Student commits suicide by drinking poison

களக்காடு அருகேமாணவன் விஷம் குடித்து தற்கொலை

களக்காடு அருகேமாணவன் விஷம் குடித்து தற்கொலை
களக்காடு அருகே மாணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
களக்காடு:
களக்காடு அருகே மாணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

பள்ளிக்கூட மாணவன்

க்ஷகளக்காடு அருகே உள்ள கீழ உப்பூரணியைச் சேர்ந்தவர் அந்தோணி பால்ராஜ். இவருடைய மகன் சிவா பிரவின் (வயது 14). இவர்  ஒரு பள்ளிக்கூடத்தில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளதால், சிவா பிரவின் வீட்டில் இருந்து வந்தார். சம்பவத்தன்று அவர் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு சென்றார். ஆனால் நீண்டநேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. உடனே அவரது பெற்றோர், வயலுக்கு சென்று பார்த்தபோது அங்கு சிவா பிரவின் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார்.

சாவு

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில், களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

இதேபோல் பாளையங்கோட்டை கே.டி.சி. நகரைச் சேர்ந்தவர் லோகநாதன் மனைவி ரேகா (24). இவர் குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டில் திடீரென்று தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் கிடந்தார். 

உடனே உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ரேகா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின்பேரில், பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கட்டிட தொழிலாளி தற்கொலை
பேட்டையில் கட்டிட தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
2. வியாபாரி விஷம் குடித்து தற்கொலை
நெல்லையில் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
3. முதியவர் விஷம் குடித்து தற்கொலை
சுரண்டையில் முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
4. விவசாயி தற்கொலை
கடையநல்லூரில் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
5. விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
நெல்லையில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.