ஒரு வயது குழந்தை உள்பட 141 பேருக்கு கொரோனா


ஒரு வயது குழந்தை உள்பட 141 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 3 May 2021 6:08 PM GMT (Updated: 3 May 2021 6:08 PM GMT)

பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவில் ஒரு வயது குழந்தை உள்பட 141 பேருக்கு கொரோனா உறுதியானது.

பொள்ளாச்சி

பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவில் ஒரு வயது குழந்தை உள்பட 141 பேருக்கு கொரோனா உறுதியானது. 

ஒரு வயது குழந்தை

பொள்ளாச்சி நகரில் நேரு காலனி, அபுல்கலாகுழந்தை வீதி, டி.கோட்டாம் பட்டி, எஸ்.வி.நாயுடு வீதி, குமரன் வீதி, வெங்கட்ரமணன் வீதி, விஜய ராகவன் வீதி, ஜோதி நகர், அண்ணா நகர் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 34 பேருக்கு  கொரோனா உறுதியானது. 
இதில் ரத்தனம் நகரை சேர்ந்த ஒரு வயது குழந்தையும் பாதிக்கப்பட்டு உள்ளது. பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் ஆச்சிப்பட்டியில் 4 பேருக்கும், பணிக்கப்பட்டியில் 3 பேருக்கும், நெகமம், கொங்கு நாட்டான்புதூர், கொசுவமடை, ராமபட்டிணம், திப்பம்பட்டி, குள்ளிசெட்டிபாளையத்தில் தலா 2 பேருக்கும், குரும்பபாளையம், மண்ணூர், புளியம்பட்டி, மாப்பிள்ளை கவுண்டன்பு தூர்ஆகிய பகுதிகளில் தலா ஒருவருக்கும் சேர்த்து 22 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. 

பொள்ளாச்சியில் 80 பேர் 

தெற்கு ஒன்றியத்தில் மாக்கினாம்பட்டியில் 5 பேருக்கும், சின்னாம் பாளையத்தில் 4 பேருக்கும், கோலார்பட்டியில் 3 பேருக்கும், எஸ்.மலையாண்டிபட்டிணம், ஊஞ்சவேலாம்பட்டி, வஞ்சியாபுரத்தில் தலா ஒருவருக்கும், ஜமீன்ஊத்துக்குளி, சமத்தூர், சீனிவாசபுரம், கோலார்பட்டி ஆகிய பகுதிகளில் தலா 2 பேருக்கும் சேர்த்து 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 

பொள்ளாச்சி பகுதிகளில் மட்டும் ஒரு நாளில் 80 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கிணத்துக்கடவு 

கிணத்துக்கடவு பகுதியில் மட்டும்  ஒரு நாளில் 35 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதனால் தற்போது கிணத்துக்கடவு தாலுகாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 558 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7-ஆகவும் உயர்ந்து உள்ளது. 

கிணத்துக்கடவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் நல்லட்டி பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சித்ரா தலைமையில் டாக்டர்கள் சமீதா, தீலிப்குமார், கவிதா, அருண்பிரகாஷ் தலைமையிலான மருத்துவ குழுக்கள் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட மெட்டுவாவி, கிணத்துக்கடவு, சொலவம்பாளையம் பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தி, கொரோனா பரிசோதனை செய்வதுடன், கபசுர குடிநீர் மற்றும் நோய் தடுப்பு மாத்திரைகளை வழங்கி வருகிறார்கள்.

141 பேருக்கு கொரோனா 

மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருவதுடன், பிளீச்சிங் பவுடரும் தெளிக்கப்பட்டு வருகிறது. அதுபோன்று ஆனைமலையில் 26 பேருக்கு தொற்று உறுதியானது. 

எனவே  ஒருநாளில் மட்டும் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை ஆகிய பகுதிகளில் ஒரே நாளில் 141 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.


Next Story