வால்பாறையில் மழை பெய்து வருவதால் தேயிலை செடிகள் கொழுந்து விட தொடங்கியது


வால்பாறையில் மழை பெய்து வருவதால்  தேயிலை செடிகள் கொழுந்து விட தொடங்கியது
x
தினத்தந்தி 3 May 2021 6:12 PM GMT (Updated: 3 May 2021 6:12 PM GMT)

வால்பாறையில் மழை பெய்து வருவதால் தேயிலை செடிகள் கொழுந்துவிட தொடங்கியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

வால்பாறை

வால்பாறையில் மழை பெய்து வருவதால் தேயிலை செடிகள் கொழுந்துவிட தொடங்கியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். 

வால்பாறை 

மலைப்பிரதேசமான வால்பாறை பகுதியை பொறுத்தவரை ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடைகாலம் நிலவும். இந்த கோடையில் வெயில் காரணமாக தேயிலை செடிகளை சிவப்பு சிலந்தி பூச்சி தாக்குதல், தேயிலை கொசு தாக்குதல் அதிகரித்து காணப்படும்.

இந்த நிலையில் கடந்த மாதத்தின் இறுதி வாரத்தில் இருந்து பலத்த இடியுடன் கனமழை பெய்தது. ஆனால் ஒருவாரமாக மழை பெய்யவில்லை. 

கனமழை 

வால்பாறை மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில்  இருந்தே மேகமூட்டங்கள் சூழ்ந்து இருந்தது. ஆனால் மழை பெய்யவில்லை. ஆனால் இரவு 7 மணியில் இருந்து 8 மணி வரை மிதமான மழை பெய்தது. சில எஸ்டேட் பகுதிகளில் கனமழை பெய்தது.

இதன் காரணமாக வால்பாறை மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் இதமான காலநிலை நிலவியது. இதனால் வால்பாறை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

விவசாயிகள் மகிழ்ச்சி 

இதற்கிடையே இங்கு அவ்வப்போது கனமழை மற்றும் லேசான மழை பெய்து வருவதால் தேயிலை செடிகளில் உள்ள கொழுந்து இலைகள் துளிர்விட்டு வளர தொடங்கி உள்ளது.

 இதன் காரணமாக தேயிலை உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டு உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். 


Next Story