சாக்கடை கால்வாய் முறையாக கட்டப்படாததை கண்டித்து பணிகளை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்


சாக்கடை கால்வாய் முறையாக கட்டப்படாததை கண்டித்து பணிகளை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்
x
தினத்தந்தி 3 May 2021 6:21 PM GMT (Updated: 3 May 2021 6:21 PM GMT)

போயம்பாளையத்தில் சாக்கடை கால்வாய் முறையாக கட்டப்படாததை கண்டித்து பொதுமக்கள் பணிகளை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அனுப்பர்பாளையம்
போயம்பாளையத்தில் சாக்கடை கால்வாய் முறையாக கட்டப்படாததை கண்டித்து பொதுமக்கள் பணிகளை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சாக்கடை கால்வாய்
திருப்பூர் 30-வது வார்டு போயம்பாளையத்தை அடுத்த ராஜாநகர் 5-வது வீதியில் மாநகராட்சி சார்பில் சாக்கடை கால்வாய் கட்டப்பட்டு வருகிறது. கடந்த 10 நாட்களாக இந்த பணி நடைபெற்று வருகிறது. அங்கு வீதியின் இருபுறமும் கட்டப்பட்டு வரும் சாக்கடை கால்வாய் சில இடங்களில் அகலம் குறைவாகவும், சென்ட்ரிங் இல்லாமலும் கட்டப்படுவதாக தெரிகிறது.
  இந்த நிலையில் நேற்று வழக்கம் போல பணிகள் நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் போயம்பாளையம் கிளை செயலாளர் சசிக்குமார் தலைமையில் அங்கு சென்ற பொதுமக்கள் சாக்கடை கால்வாய் முறையாக கட்டப்படவில்லை என்று கூறி பணிகளை தடுத்து நிறுத்தினார்கள். 
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவலறிந்த மாநகராட்சி 2-வது மண்டல இளநிலை பொறியாளர் சுப்பிரமணியம் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சாக்கடை கால்வாய் சில இடங்களில் அகலம் குறைவாக இருப்பதுடன், தனியார் இடத்திற்குள் சென்று வருவதாகவும், முறையாக கட்டப்படவில்லை என்றும் கூறி முறையிட்டனர். 
 இதையடுத்து கால்வாயின் அளவை அளந்து பார்க்க உத்தரவிட்ட இளநிலை பொறியாளர், முறையாக கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதையடுத்து பாதியில் நிறுத்தப்பட்ட பணிகள் மீண்டும் தொடங்கி நடைபெற்றது. இந்த சம்பவம் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story