மாவட்ட செய்திகள்

மானூரில்கார் மோதி விவசாயி பலி + "||" + Farmer killed in car crash

மானூரில்கார் மோதி விவசாயி பலி

மானூரில்கார் மோதி விவசாயி பலி
மானூரில் கார் மோதி விவசாயி பலியானார்.
மானூர்:
மானூரில் கார் மோதி விவசாயி பலியானார்.

விவசாயி பலி

மானூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் சாலமோன் (வயது 65). விவசாயி. இவர் மானூர் மெயின் ரோட்டில் உள்ள அவரது உறவினரின் துக்க வீட்டிற்கு சென்றுவிட்டு, வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். 

அப்போது அந்த வழியாக நெல்லை நோக்கி வந்த கார் எதிர்பாராதவிதமாக சாலமோன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

டிரைவர் கைது

இதுகுறித்து சாலமோனின் மகன் ராஜா (33) மானூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, காரை ஓட்டி வந்த தென்காசி மாவட்டம் மேலநீலிதநல்லூர் அருகே உள்ள ரங்கசமுத்திரத்தை சேர்ந்த அசோக் (39) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

விபத்தில் இறந்த சாலமோனுக்கு சுப்பு என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. துக்க நிகழ்ச்சிக்கு சென்ற தாய்-மகன் கார் மோதி பலி
தென்னிலை அருகே துக்க நிகழ்ச்சிக்கு சென்ற தாய்-மகன் கார் மோதி பரிதாபமாக இறந்தனர்.
2. மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல் மோதியது.
3. கார் மோதியதில் கல்லூரி மாணவர் பலி
பென்னாகரம் அருகே, மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் கல்லூரி மாணவர் பலியானார்.