மாவட்ட செய்திகள்

காட்டு யானைகள் அட்டகாசம் + "||" + Wild elephants roar

காட்டு யானைகள் அட்டகாசம்

காட்டு யானைகள் அட்டகாசம்
காட்டு யானைகள் அட்டகாசம்.
பந்தலூர்,

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட அய்யன்கொல்லி அருகே புஞ்சைக்கொல்லி பகுதியில் காட்டுயானைகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் அந்த பகுதியில் நேற்று முன்தினம் இரவில் 2 காட்டுயானைகள் புகுந்தன. 

தொடர்ந்து பொதுமக்களின் வீடுகளை முற்றுகையிட்டன. பின்னர் யோகேஸ்வரன் என்பவரது தோட்டத்தில் பயிரிட்டு இருந்த வாழை, தென்னை மரங்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்தது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு சேரம்பாடி வனவர் சசிகுமார் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து வந்தனர். 

பின்னர் காட்டுயானைகளை விரட்டியடித்தனர். இதேபோன்று கோட்டப்பாடி, தட்டாம்பாறை ஆகிய பகுதிகளிலும் காட்டுயானைகள் அட்டகாசம் செய்தன. மேலும் அய்யன்கொல்லி-கொளப்பள்ளி சாலையில் உலா வந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. கல்லாறு பழப்பண்ணைக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்
மேட்டுப்பாளையம் அருகே உள்ள கல்லாறு பழப்பண்ணைக்குள் புகுந்து காட்டு யானை அட்டகாசம் செய்தது. இதில் 100 வாழைகள் நாசமானது.
2. ஊருக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்
கூடலூர் அருகே ஊருக்குள் புகுந்து வாழைகளை நாசப்படுத்தி காட்டு யானைகள் அட்டகாசம் செய்தது.
3. கடையநல்லூர் அருகே விளைநிலத்தில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்
கடையநல்லூர் அருகே விளைநிலத்தில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்தது.
4. தோட்டத்தில் காட்டு யானைகள் அட்டகாசம்
விக்கிரமசிங்கபுரம் அருகே தோட்டத்தில் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்தன.