மாவட்ட செய்திகள்

மாவட்டத்தில் ஒரேநாளில் 229 பேருக்கு கொரோனா தொற்று + "||" + Corona

மாவட்டத்தில் ஒரேநாளில் 229 பேருக்கு கொரோனா தொற்று

மாவட்டத்தில் ஒரேநாளில் 229 பேருக்கு கொரோனா தொற்று
மாவட்டத்தில் ஒரேநாளில் 229 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கரூர்
229 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகமாக சென்ற வண்ணம் உள்ளது. இதனால் பொதுமக்கள் வெளியே செல்லும்போது முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்பன பல்வேறு விழிப்புணர்வுகளை சுகாதாரத்துறையினர் வெளியிட்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக நேற்று தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்பேரில், கரூர் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் மட்டும் 229 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 
மருத்துவமனையில் சிகிச்சை
இந்தநிலையில் ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 118 பேர் பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் நேற்றைய நிலவரப்படி 1,181 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் நேற்று மட்டும் 20,952 பேருக்கு கொரோனா; 122 பேர் பலி
தமிழகத்தில் புதிதாக 20,952 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 122 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர்.
2. கொரோனா தொற்றுக்கு 4 பெண்கள் இறந்தனர்
ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு 4 பெண்கள் இறந்தனர். மேலும் சிவகங்கை மாவட்டத்தில் 2 பேர் உயிரிழந்தனர்
3. மேலும் 271 பேருக்குகொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 271 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பலி எண்ணிக்கை 245 ஆக உயர்ந்துள்ளது.
4. புதிதாக 880 பேருக்கு நோய் தொற்று; 7 பேர் உயிரிழப்பு
மதுரையில் நேற்று புதிய உச்சமாக 880 பேர் பாதிக்கப்பட்டனர். இதுபோல், ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்தனர்.
5. இதுவரை 14,346 பேர் உயிரிழப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை கடந்தது
தமிழகத்தில் கொரோனாவால் இதுவரை 14 ஆயிரத்து 346 பேர் உயிரிழந்துள்ளனர். புதிதாக 20 ஆயிரத்து 768 பேர் இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.