மாவட்ட செய்திகள்

இணைய வழியில் உலக புத்தக தின விழா + "||" + World Book Day

இணைய வழியில் உலக புத்தக தின விழா

இணைய வழியில் உலக புத்தக தின விழா
சிவகங்கையில் இணைய வழியில் உலக புத்தக தின விழா கொண்டாடப்பட்டது.
சிவகங்கை,

உலகம் முழுவதும் கொரோனா படு வேகமாக பரவி வரும் இச்சூழலில் பாதுகாப்பை கருதி தமிழ்நாடு அறிவியல் இயக்க சிவகங்கை கிளையும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க சிவகங்கை கிளையும் இணைந்து இணைய வழியில் உலக புத்தக தின விழாவை சிவகங்கையில் கொண்டாடினர்.

இந்நிகழ்ச்சிக்கு மன்னர் துரைசிங்கம் கல்லூரி பேராசிரியரும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க சிவகங்கை கிளை தலைவருமான தங்க முனியாண்டி தலைமை தாங்கினார்.தமிழ்நாடு அறிவியல் இயக்க சிவகங்கை கிளை தலைவர் புலவர் கா.காளிராசா முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க சிவகங்கை கிளைச் செயலாளர் ம.பிரபாகரன் வரவேற்று பேசினார்.சிவகங்கை மாவட்ட செயலாளர் ப.சாஸ்தா சுந்தரம் வாழ்த்துரை வழங்கினார். வாசிப்பை நேசிப்போம் என்கிற தலைப்பில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க சிவகங்கை மாவட்ட செயலாளர் சங்கர சுப்பிரமணியன் கருத்துரை வழங்கினார். முடிவில் அறிவொளி இயக்க பாடகர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.