மாவட்ட செய்திகள்

மின்னல் தாக்கியதில் தீப்பிடித்தது:பழைய இரும்பு பொருட்கள் சேதம் + "||" + Damage to old iron materials

மின்னல் தாக்கியதில் தீப்பிடித்தது:பழைய இரும்பு பொருட்கள் சேதம்

மின்னல் தாக்கியதில் தீப்பிடித்தது:பழைய இரும்பு பொருட்கள் சேதம்
மின்னல் தாக்கி தீப்பிடித்ததில் பழைய இரும்பு பொருட்கள் சேதம் அடைந்தன.
தென்காசி:

தென்காசி செங்குந்தர் புதுத்தெருவை சேர்ந்தவர் சுரேஷ்ராஜன் (வயது 42). இவர் தென்காசி முனிசிபல் காலனி பகுதியில் பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் வாங்கி விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். 

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு தென்காசியில் திடீரென இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில், அந்த கடையின் அருகில் உள்ள வேப்பமரத்தில் தீப்பிடித்து எரிந்தது. அந்த தீ கடையில் உள்ள பொருட்களுக்கும் பரவியது. 

இதுகுறித்து தகவல் அறிந்ததும், தென்காசி தீயணைப்பு படை மாவட்ட அலுவலர் (பொறுப்பு) வெட்டும் பெருமாள், தென்காசி நிலைய அலுவலர் ரமேஷ் மற்றும் தீயணைப்பு படையினரும், செங்கோட்டை, கடையநல்லூர் தீயணைப்பு படையினரும் அங்கு வந்து, தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். சுமார் 3 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. இந்த தீவிபத்தில் அங்கிருந்த பழைய இரும்பு, பிளாஸ்டிக் பொருட்கள் சேதம் அடைந்தன.