நெல்லை மாவட்டத்திற்கு 2 புதிய ரோந்து வாகனங்கள்


நெல்லை மாவட்டத்திற்கு  2 புதிய ரோந்து வாகனங்கள்
x
தினத்தந்தி 3 May 2021 7:28 PM GMT (Updated: 3 May 2021 7:28 PM GMT)

நெல்லை மாவட்டத்திற்கு புதிதாக 2 ரோந்து வாகனங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

நெல்லை:
நெல்லை மாவட்டத்திற்கு புதிதாக 2 ரோந்து வாகனங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

நெல்லை  மாவட்டத்தில் நெடுஞ்சாலைகளில் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தும் வகையில், தமிழக அரசால் மாவட்ட போலீசாருக்கு புதிதாக 2 நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ரோந்து வாகனங்களை நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

ரோந்து பணி தீவிரப்படுத்தப்படும்

நெடுஞ்சாலைகளில் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தவும், விபத்துகளை தடுக்கவும், புதிதாக நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் அரசால் வழங்கப்பட்டுள்ளது. இந்த ரோந்து வாகனங்கள் தாழையூத்து உட்கோட்ட பகுதியில்‌ உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நெடுஞ்சாலை ரோந்து வாகனம் -1 எனவும், மற்றொரு வாகனம் நாங்குநேரி உட்கோட்ட பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நெடுஞ்சாலை ரோந்து வாகனம்-2 எனவும் அழைக்கப்பட்டு.  இதில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என்றார். 
இதேபோல் தென்காசி மாவட்டத்திற்கும் ரோந்து வாகனம் ஒன்று வழங்கப்பட்டு உள்ளது.

அப்போது நெல்லை தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், நெல்லை மாவட்ட ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் கிளாட்ஸன் ஜோஸ், மாவட்ட ஆயுதப்படை வாகன பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

Next Story