சிவகங்கை தொகுதியை தக்க வைத்து கொண்ட அ.தி.மு.க.


சிவகங்கை தொகுதியை தக்க வைத்து கொண்ட அ.தி.மு.க.
x
தினத்தந்தி 3 May 2021 7:51 PM GMT (Updated: 3 May 2021 7:51 PM GMT)

இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளரை வீழ்த்தி சிவகங்கை சட்டமன்ற தொகுதியை அ.தி.மு.க. தக்க வைத்து கொண்டது. வெற்றி பெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்நாதனுக்கு வெற்றி சான்றிதழ் வழங்கப்பட்டது.

சிவகங்கை,

இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளரை வீழ்த்தி சிவகங்கை சட்டமன்ற ெதாகுதியை அ.தி.மு.க. தக்க வைத்து கொண்டது. வெற்றி பெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்நாதனுக்கு வெற்றி சான்றிதழ் வழங்கப்பட்டது.

அ.தி.மு.க. வெற்றி

சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க.வும், இந்திய கம்யூனிஸ்டும் நேருக்கு நேர் மோதி கொண்டன. இந்த தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் 81 ஆயிரத்து 992 வாக்குகள் பெற்று வெற்றி வாகை சூடினார். அவரை எதிர்த்து போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் 70 ஆயிரத்து 752 வாக்குகள் பெற்று இருந்தார். இதனால் 11 ஆயிரத்து 240 வாக்குகள் அதிகம் பெற்று அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்நாதன் வெற்றி கனியை பறித்தார்.
 வெற்றி பெற்ற செந்தில்நாதனுக்கு தேர்தல் அலுவலர் முத்துகழுவன் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதற்கான வெற்றி சான்றிதழை வழங்கினார். அப்போது அ.தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தக்க வைத்து கொண்டது

ஏற்கனவே கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட பாஸ்கரன் வெற்றி பெற்று கதர்வாரியத்துறை அமைச்சராக பதவி வகித்தார். தற்போத நடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்நாதன் வெற்றி பெற்றதன் மூலம் சிவகங்கை தொகுதியை அ.தி.மு.க. தக்க வைத்து கொண்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Next Story