மாவட்ட செய்திகள்

மீன் வியாபாரி தற்கொலை + "||" + fish merchant suicide

மீன் வியாபாரி தற்கொலை

மீன் வியாபாரி தற்கொலை
மீன் வியாபாரி தற்கொலை
பல்லடம்
 திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரை சேர்ந்த பரமசிவம் மகன் செல்லத்துரை. இவர் கடந்த 3 வருடங்களாக, பல்லடம் அருகே  சங்கோதி பாளையத்தில் மீன் கடை வைத்து நடத்தி வந்தார். இவரது மனைவி நிஷா பவுல் மேர வயது 24. இவர்களுக்கு  இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மீன் வியாபாரம் சரிவர நடக்கவில்லை. தற்பொது கொரோனா பரவலை முன்னிட்டு தமிழக அரசு மீன் மற்றும் இறைச்சிக் கடைகளை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மூட உத்தரவிட்டுள்ளது. இதனால் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. 
இதற்கிடையில் நேற்று முன்தினம் இரவு, கணவன் மனைவி இருவரும் மீன் வியாபாரம் குறித்து பேசிக் கொண்டிருக்கையில் இருவருக்குள்ளும் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது.  இந்தநிலையில் நேற்று காலை வழக்கம்போல் எழுந்த நிஷா வீட்டின் முன்புறம் வாசல் தெளிக்க வந்தபோது, அங்குள்ள பந்தல் கூரை கம்பியில், கயிற்றால் தூக்கு போட்ட நிலையில் செல்லத்துரை தொங்கிக் கொண்டிருந்தார். இதைக்கண்டு நிஷா அலறித் துடித்தார். நிஷாவின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தூக்கில் தொங்கிய செல்லத்துரையை மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து  பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.