மாவட்ட செய்திகள்

அதிகாரிகளுக்கு கொரோனா + "||" + corona

அதிகாரிகளுக்கு கொரோனா

அதிகாரிகளுக்கு கொரோனா
உடுமலை வேளாண்மைத்துறை அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
போடிப்பட்டி,
உடுமலை வேளாண்மைத்துறை அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2 பேருக்கு தொற்று
உடுமலைபொள்ளாச்சி சாலையிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் உள்ளது. இங்கு வேளாண்மைத் துறை தோட்டக்கலைத் துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு மானியத்திட்டங்கள் பற்றி அறிந்து கொள்வதற்கும் விதை உள்ளிட்ட இடுபொருட்களை வாங்கி செல்வதற்கும் பயிர் சம்பந்தமான சந்தேகங்களை தெளிவுபடுத்தி கொள்வதற்கும் என தினசரி ஏராளமான விவசாயிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் இங்கு பணியாற்றிய வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் என இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்றுக்கு முற்றுப்புள்ளி
ஆனாலும் வேளாண்மைத் துறை அலுவலகம் வழக்கம் போல செயல்பட்டு வருகிறது. இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் வேளாண்மைத்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் அச்ச உணர்வுடனேயே பணியாற்றி வருகிறார்கள்.எனவே விவசாயிகள் அனைவரும் வேளாண்மைத் துறை அலுவலகம் வருவதைத் தவிர்த்து முடிந்தவரை தங்கள் தேவைகள் குறித்து தொலைபேசி மூலம் தகவல் தெரிந்து கொள்ளலாம்.மேலும் முககவசம் உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகளை முறையாக பின்பற்றி தொற்று பரவலுக்கு முற்றுப்புள்ளி வைக்க உதவ வேண்டும்.