மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பலி + "||" + Motorcycle collision Valipar kills

மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பலி

மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பலி
மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் கீற்றுக்கடையை சேர்ந்தவர் ராகவன். இவருடைய மகன் சுஜித்(வயது 21). இவர் நேற்று மாலை பெரம்பலூர்- ஆலம்பாடி பிரிவு சாலை அருகே மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது எதிரே ஆலம்பாடியை சேர்ந்த துரைசாமி மகன் போர்மன்னன் (26) மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக போர்மன்னனின் மோட்டார் சைக்கிளும், சுஜித்தின் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் அவர்கள் 2 பேரும் படுகாயமடைந்த நிலையில், சுஜித் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அந்த வழியாக சென்றவர்கள் போர்மன்னனை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பலூர் போலீசார் சுஜித்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மோட்டார் சைக்கிள் விபத்தில் தாய் பலி; குழந்தை படுகாயம்
கல்லங்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தாய் பரிதாபமாக இறந்தார். குழந்தை படுகாயம் அடைந்தது.
2. விபத்தில் படுகாயமடைந்தவர் சாவு
விபத்தில் படுகாயமடைந்தவர் இறந்தார்.
3. திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்; தனியார் நிறுவன ஊழியர் சாவு; டிரைவர் கைது
திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள்-லாரி மோதி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.
4. தொடர் விபத்தில் சிக்கும் நாடார் மேடு பகுதி அச்சத்தில் வாகன ஓட்டிகள்-பொதுமக்கள்
தொடர் விபத்தில் சிக்கும் நாடார் மேடு பகுதியில் செல்லும்போது வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அச்சப்படும் நிலை உள்ளது.
5. விபத்தில் விவசாயி பலி
சாக்கோட்டை அருகே விபத்தில் விவசாயி பலியானார்.