ஈரோடு மாவட்டத்தில் 13,463 பேர் நோட்டாவுக்கு வாக்கு


ஈரோடு மாவட்டத்தில் 13,463 பேர் நோட்டாவுக்கு வாக்கு
x
தினத்தந்தி 3 May 2021 8:28 PM GMT (Updated: 3 May 2021 8:30 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் 13 ஆயிரத்து 463 பேர் நோட்டாவுக்கு வாக்கு அளித்தனர்.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் 13 ஆயிரத்து 463 பேர் நோட்டாவுக்கு வாக்கு அளித்தனர்.
நோட்டா
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் முடிவுகள் நேற்றுமுன்தினம் அறிவிக்கப்பட்டு உள்ளது. வேட்பாளர்களுக்கு வாக்குகள் அளிக்க விரும்பாத வாக்காளர்களும் தங்கள் ஜனநாயக கடமையை தவறாமல் நிறைவேற்றும் வகையில் யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை என்பதை பதிவு செய்ய நோட்டா என்ற   வாய்ப்பு  வழங்கப்பட்டு உள்ளது.  இந்த வாய்ப்பினை பயன்படுத்தி ஈரோடு மாவட்டத்தில் 13 ஆயிரத்து 463 பேர் தங்கள் ஓட்டுகள் பதிவு செய்து உள்ளனர்.  அதன்படி ஈரோடு கிழக்கு தொகுதியில் 1,546 பேர் நோட்டாவுக்கு வாக்களித்து உள்ளனர். 
தபால் வாக்களித்த 16 பேரும் நோட்டாவுக்கு ஓட்டு போட்டு உள்ளனர்.
மொடக்குறிச்சி
ஈரோடு மேற்கு தொகுதியில் 14 தபால் வாக்குகள் உள்பட 1,968 ஓட்டுகள் நோட்டாவுக்கு பதிவாகி உள்ளன. மொடக்குறிச்சி தொகுதியில் 10 தபால் வாக்குகள் உள்பட 2, 342 வாக்குகளும், பெருந்துறை தொகுதியில் 10 தபால் வாக்குகள் உள்பட 1,189 வாக்குகளும் கிடைத்து உள்ளன. 
பவானி தொகுதியில் 9 தபால் ஓட்டுகள் உள்பட 2,079 வாக்குகள், அந்தியூர் தொகுதியில் 10 தபால் ஓட்டுகள் உள்பட 1,027 வாக்குகள், கோபி தொகுதியில் 12 தபால் வாக்குகள் உள்பட 1,307 வாக்குகள், பவானிசாகர் தொகுதியில் 2 தபால் வாக்குகள் உள்பட 2,005 வாக்குகளும் நோட்டாவுக்கு பதிவாகி உள்ளன.

Next Story