மாவட்ட செய்திகள்

நோட்டாவில் அதிகம் வாக்குகள் விழுந்த மானாமதுரை தொகுதி + "||" + Nota

நோட்டாவில் அதிகம் வாக்குகள் விழுந்த மானாமதுரை தொகுதி

நோட்டாவில் அதிகம் வாக்குகள் விழுந்த மானாமதுரை தொகுதி
மானாமதுரை தொகுதியில் நோட்டாவுக்கு அதிக வாக்குகள் விழுந்தன.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. 4 சட்டமன்ற தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரி, அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் நேற்று முன்தினம் எண்ணப்பட்டன.

சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு ஓட்டு போட விருப்பம் இல்லாதவர்கள் நோட்டாவுக்கு தங்கள் வாக்கை செலுத்தினார்கள். அந்த வகையில் 4 தொகுதிகளிலும் நோட்டாவுக்கு வாக்குகள் விழுந்தன. இதில் அதிக பட்சமாக மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் நோட்டாவுக்கு 1,835 ஓட்டுகள் விழுந்தன. காரைக்குடியில் 1,323 ஓட்டுகளும், சிவகங்கையில் 1,264 ஓட்டுகளும், திருப்பத்தூரில் 853 ஓட்டுகளும் நோட்டாவில் விழுந்தன.

தொடர்புடைய செய்திகள்

1. நோட்டாவுக்கு 7 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் - பீகாரில் அரசியல் கட்சிகள் அதிர்ச்சி
பீகார் தேர்தலில் நோட்டாவுக்கு 7 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்துள்ளது அரசியல் கட்சிகளை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.