கோவையில் வெற்றியை கொண்டாட்டிய தி.மு.க., அ.தி.மு.க.வினர் மீது வழக்குப்பதிவு


கோவையில் வெற்றியை கொண்டாட்டிய தி.மு.க., அ.தி.மு.க.வினர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 3 May 2021 9:12 PM GMT (Updated: 3 May 2021 9:12 PM GMT)

கோவையில் வெற்றியை பட்டாசு வெடித்து கொண்டாட்டிய தி.மு.க., அ.தி.மு.க.வினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கோவை

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஏற்கனவே வெற்றி விழா கொண்டாட தடைவிதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலுக்கு நேற்று முன்தினம் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் பல்வேறு இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றது.

 இதனால் தி.மு.க. தொண்டர்கள் உக்கடம் வின்சென்ட் ரோடு இக்பால் திடலில் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கொரோனா விதிகளை மீறியதாக தி.மு.க. நிர்வாகி கோட்டை அப்பாஸ் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

மேலும் போத்தனூர் மேட்டூர் மாகாளியம்மன் கோவில் அருகே பட்டாசு வெடித்து வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வை சேர்ந்த ஜெகதீஷ், மாணிக்கம், சரவணன், ரவி, ரஞ்சித், பிரபு, குரு ஆகியோர் மீது போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதேபோல கோவை மாவட்டத்தில் அ.தி.மு.க வெற்றி பெற்றதை அ.தி.மு.க.வினர் போத்தனூர் பகுதியில் போட்டிபோட்டு பட்டாசு வெடித்தனர்.

 இதையொட்டி அ.தி.மு.க.வை சேர்ந்த வெங்கடேஷ், சூர்யா, மணி, ஜெயக்குமார், பாலு, ஜீவானந்தம் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விதிமுறை மீறல், தொற்றுநோய் பரவல் தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Next Story