மாவட்ட செய்திகள்

இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 10 பேர் கைது + "||" + Conflict between the two sides

இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 10 பேர் கைது

இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 10 பேர் கைது
இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டனர்
மணப்பாறை
மணப்பாறையை அடுத்த கரிச்சாம்பட்டி சித்தாநத்தத்தை சேர்ந்த ஒரு தரப்பினர் காரை சாலையோரம் நிறுத்தியிருந்தனர். அப்போது கரிச்சாம்பட்டியைச் சேர்ந்த ஒருவர் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தார். அப்போது அவர் காரை ஓரமாக நிறுத்த வேண்டியது தானே என்று கேட்டார். இதுெதாடர்பாக அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது அந்த கார் தாக்கப்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருதரப்பினரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதுகுறித்து சித்தாநத்தத்தைச் சேர்ந்த ராஜா அளித்த புகாரின்பேரில் கரிச்சாம்பட்டியைச் சேர்ந்த சிவா(வயது 28), மணிகண்டன் (23), நேரு(30), கோபிநாத் (25) உள்பட 7 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் 4 பேரை கைது செய்தனர்.  இதேபோல  கோபிநாத் என்பவர் அளித்த புகாரின்பேரில் சித்தாநத்தம் பகுதியை சேர்ந்த அலெக்ஸ் (23), ராஜா(27), பெரியசாமி (19), சந்தோஷ்குமார் (19), அஜித்குமார் (23), வேலு (48) ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். 3 பேரை தேடி வருகின்றனர்.தொடர்புடைய செய்திகள்

1. கச்சிராயப்பாளையம் அருகே இரு தரப்பினரிடையே மோதல்; வீடுகள் சூறை- சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
கச்சிராயப்பாளையம் அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் வீடுகள் சூறையாடப்பட்டன. சம்பந்தப்பட்டநபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஒருதரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.