மாவட்ட செய்திகள்

லாரி டிரைவர் வீட்டில் நகை-பணம் கொள்ளை + "||" + Jewelry-money robbery

லாரி டிரைவர் வீட்டில் நகை-பணம் கொள்ளை

லாரி டிரைவர் வீட்டில் நகை-பணம் கொள்ளை
லாரி டிரைவர் வீட்டில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது
துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த ரங்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 54). லாரி டிரைவர். இவரது மனைவி தனலட்சுமி. இந்த தம்பதியருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். பாஸ்கரன் நேற்று முன்தினம் தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்தார். பின்னர் அங்கிருந்து நேற்று அதிகாலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாஸ்கரன் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ மற்றும் பாதுகாப்பு பெட்டகம் ஆகியவையும் உடைக்கப்பட்டு கிடந்தன. மேலும் பீேராவில் வைக்கப்பட்டிருந்த 25 பவுன் நகைகள் மற்றும் ரூ.25 ஆயிரம் கொள்ளை போய் இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து பாஸ்கரன் கொடுத்த புகாரின்பேரில் துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.தொடர்புடைய செய்திகள்

1. பள்ளிப்பட்டு அருகே ரியல் எஸ்டேட் தரகர் வீட்டில் நகை-பணம் கொள்ளை வழக்கில் 3 பேர் கைது
பள்ளிப்பட்டு அருகே ரியல் எஸ்டேட் தரகர் வீட்டில் நகை-பணம் கொள்ளை வழக்கில் 3 பேர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
2. கரூர் அருகே பட்டப்பகலில் அரசு பள்ளி ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை - மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
கரூர் அருகே பட்டப்பகலில் அரசு பள்ளி ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.