நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால் குண்டேரிப்பள்ளம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்வு

நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால் குண்டேரிப்பள்ளம் அணை  நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்வு
x
தினத்தந்தி 3 May 2021 9:45 PM GMT (Updated: 3 May 2021 9:45 PM GMT)

நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால் குண்டேரிப்பள்ளம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்ந்தது.

டி.என்.பாளையம்
நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால் குண்டேரிப்பள்ளம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்ந்தது. 
குண்டேரிப்பள்ளம்
டி.என்.பாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையத்தில் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது குண்டேரிப்பள்ளம் அணை. இதன்மூலம் 2,498 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான குன்றி, விளாங்கோம்பை, கம்பனூர் ஆகிய வனப் பகுதிகளில் மிதமானமழை பெய்தது. இதனால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்தது.
நீர்மட்டம் உயர்வு
நேற்று காலை 5 மணியளவில் அணைக்கு 252 கனஅடி தண்ணீர் வந்தது. பின்பு படிப்படியாக குறைந்தது. நேற்று முன்தினம் மாலை 6 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 21 அடியாக இருந்தது. இந்தநிலையில் நேற்று அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் 78 மி.மீ. மழை பெய்தது. ஒரே நாள் பெய்த இந்த மழை தண்ணீரால் அணையின் நீர்மட்டம் 10 அடி உயர்ந்துள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 32 அடியாக உள்ளது.

Next Story