கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.31½ லட்சத்துக்கு விவசாய விளைபொருட்கள் ஏலம்


கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.31½ லட்சத்துக்கு விவசாய விளைபொருட்கள் ஏலம்
x
தினத்தந்தி 3 May 2021 9:50 PM GMT (Updated: 3 May 2021 9:50 PM GMT)

கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாய விளைபொருட்கள் ரூ.31 லட்சத்து 46 ஆயிரத்து 583-க்கு விற்பனை ஆனது.

கொடுமுடி
கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாய விளைபொருட்கள் ரூ.31 லட்சத்து 46 ஆயிரத்து 583-க்கு விற்பனை ஆனது. 
ஏலம்
சாலைப்புதூரில் உள்ள கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாய விளைபொருட்கள் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு கொடுமுடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகள் 11 ஆயிரத்து 722 தேங்காய்களை விற்பனைக்காக கொண்டுவந்திருந்தனர். இது குறைந்தபட்ச விலையாக கிலோ ஒன்று 28 ரூபாய் 45 காசுக்கும், அதிகபட்ச விலையாக 34 ரூபாய் 50 காசுக்கும் என மொத்தம் 1 லட்சத்து 21 ஆயிரத்து 109-க்கு விற்பனை ஆனது. 
276 மூட்டைகளில் கொப்பரை தேங்காய்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் முதல் தரம் கிலோ ஒன்று குறைந்தபட்ச விலையாக 107 ரூபாய் 77 காசுக்கும், அதிகபட்ச விலையாக 113 ரூபாய்க்கும், 2-ம் தரம் குறைந்தபட்ச விலையாக 83 ரூபாய் 75 காசுக்கும், அதிகபட்ச விலையாக 107 ரூபாய் 17 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டது. கொப்பரை தேங்காய் மொத்தம் ரூ.12 லட்சத்து 87 ஆயிரத்து 456-க்கு விற்கப்பட்டது.
எள்
எள் 243 மூட்டைகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இது குறைந்தபட்ச விலையாக கிலோ ஒன்று 82 ரூபாய் 73 காசுக்கும், அதிகபட்ச விலையாக 106 ரூபாய் 59 காசுக்கும் என மொத்தம் ரூ.17 லட்சத்து 38 ஆயிரத்து 18-க்கு விற்பனை ஆனது.
விவசாய விளைபொருட்கள் மொத்தம் ரூ.31 லட்சத்து 46 ஆயிரத்து 583-க்கு ஏலம் போனது. 

Next Story