அத்தியாவசிய பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அதிகரிப்பு


அத்தியாவசிய பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அதிகரிப்பு
x
தினத்தந்தி 3 May 2021 11:13 PM GMT (Updated: 3 May 2021 11:13 PM GMT)

அத்தியாவசிய பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அதிகரிப்பு

கோத்தகிரி

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி நேற்று முன்தினம் கோத்தகிரி பகுதியில் முழு ஊரங்கு அமல்படுத்தப்பட்டது. 

இதனால் அத்தியாவசிய பொருட்கள் விற்கும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது.இந்த நிலையில் கோத்தகிரியில் நேற்று அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டது. இதன் காரணமாக அங்கு வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக தேயிலை தொழிற்சாலைகளில் பணியாற்றும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு திங்கட்கிழமை விடுமுறை தினம் ஆகும். 

இதனால் மார்க்கெட், பழைய போலீஸ் நிலைய சாலை உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க கூட்டம் அதிகரித்தது. ஆனால் முக கவசம் அணிந்து இருந்தாலும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை எ்னபது குறிப்பிடத்தக்கது.

Next Story