மாவட்ட செய்திகள்

அ.ம.மு.க., ம.நீ.ம. வேட்பாளர்கள் உள்பட 20 பேர் டெபாசிட் இழப்பு + "||" + Loss of deposit of 20 persons including candidates

அ.ம.மு.க., ம.நீ.ம. வேட்பாளர்கள் உள்பட 20 பேர் டெபாசிட் இழப்பு

அ.ம.மு.க., ம.நீ.ம. வேட்பாளர்கள் உள்பட 20 பேர் டெபாசிட் இழப்பு
நீலகிரி மாவட்டத்தில் அ.ம.மு.க., ம.நீ.ம. வேட்பாளர்கள் உள்பட 20 பேர் டெபாசிட் இழந்தனர்.
ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் அ.ம.மு.க., ம.நீ.ம. வேட்பாளர்கள் உள்பட 20 பேர் டெபாசிட் இழந்தனர்.

தேர்தல் முடிவு

நீலகிரி மாவட்டம் ஊட்டி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ், பா.ஜ.க., மக்கள் நீதி மய்யம், அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 9 பேர் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கை முடிவில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. 

இந்த தொகுதியில் பா.ஜனதா 2-வது இடம், நாம் தமிழர் கட்சி 3-வது இடம் பிடித்தது. மொத்தம் பதிவான வாக்குகளில் 6-ல் ஒரு பங்கு வாக்குகளை வேட்பாளர்கள் பெற வேண்டும். இல்லையென்றால் டெபாசிட் இழந்ததாக அறிவிக்கப்படும். 

அதன்படி ஊட்டி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சுரேஷ்பாபு, அ.ம.மு.க. வேட்பாளர் லட்சுமணன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெயக்குமார், சுயேட்சை வேட்பாளர்கள் ஆரோக்கியநாதன், கிருஷ்ணமூர்த்தி, சர்தார் பாபு வினோத்குமார் ஆகிய 7 பேர் குறைந்த வாக்குகள் பெற்று டெபாசிட் இழந்தனர். 

கூடலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் தி.மு.க., அ.தி.மு.க. உள்பட 7 பேர் களத்தில் நின்றனர். முடிவில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. இதில் தே.மு.தி.க. வேட்பாளர் யோகேஸ்வரன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கேதீஸ்வரன், மக்கள் நீதி மய்யம் பாபு, சுயேட்சை வேட்பாளர்கள் ஜெயபிரகாஷ், சரவணன் ஆகிய 5 பேர் டெபாசிட் இழந்தனர்.

20 பேர் டெபாசிட் இழப்பு

குன்னூர் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர்கள் உள்பட 10 பேர் போட்டியிட்டனர். தி.மு.க. வெற்றி பெற்றது. இந்த தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் பிரபு இன்பதாஸ், அ.ம.மு.க. வேட்பாளர் கலைசெல்வன், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ராஜா குமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் லாவண்யா, மக்கள் புரட்சி கட்சி வேட்பாளர் ஆறுமுகம், சுயேட்சை வேட்பாளர்கள் 3 பேர் என 8 பேர் டெபாசிட் இழந்தனர். 

3 சட்டமன்ற தொகுதிகளில் 26 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் 6 பேரை தவிர, 20 பேரும் டெபாசிட் இழந்தது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சி கொடிகளுடன் ஆட்களை ஏற்றி சென்ற சரக்கு வாகனம், டிராக்டர் பறிமுதல் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக வழக்கு
அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சி கொடிகளுடன் ஆட்களை ஏற்றி சென்ற சரக்கு வாகனம், டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.