மாவட்ட செய்திகள்

ஆத்தூரில்ரூ.13¾ லட்சத்துக்கு பருத்தி ஏலம் + "||" + Cotton auctioned for Rs. 300 lakhs

ஆத்தூரில்ரூ.13¾ லட்சத்துக்கு பருத்தி ஏலம்

ஆத்தூரில்ரூ.13¾ லட்சத்துக்கு பருத்தி ஏலம்
ரூ.13¾ லட்சத்துக்கு பருத்தி ஏலம்
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள புதுப்பேட்டை வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. பி.டி. ரக பருத்தி குவிண்டாலுக்கு குறைந்தபட்சமாக ரூ.4 ஆயிரத்து 219-க்கும், அதிகபட்சமாக ரூ.6 ஆயிரத்து 210-க்கும், டி.சி.எச். ரக பருத்தி குவிண்டாலுக்கு குறைந்தபட்சமாக ரூ.4 ஆயிரத்து 899-க்கும், அதிகபட்சமாக ரூ.6 ஆயிரத்து 666-க்கும், கொட்டு ரக பருத்தி குவிண்டாலுக்கு ரூ.2 ஆயிரத்து 596, அதிகபட்சமாக ரூ.3 ஆயிரத்து 290-க்கும் விற்பனை மொத்தம் 747 மூட்டை பருத்தி ரூ.13 லட்சத்து 70 ஆயிரத்துக்கு ஏலம் போனது.