சேலத்துக்கு சரக்கு ரெயிலில் வந்த 1,600 டன் கோதுமை


சேலத்துக்கு சரக்கு ரெயிலில் வந்த 1,600 டன் கோதுமை
x
தினத்தந்தி 3 May 2021 11:19 PM GMT (Updated: 3 May 2021 11:19 PM GMT)

சரக்கு ரெயிலில் வந்த 1,600 டன் கோதுமை

சேலம்:
சேலம் செவ்வாய்பேட்டை மார்க்கெட் ரெயில் நிலையத்துக்கு வட மாநிலங்களில் இருந்து கோதுமை, பருப்பு உள்ளிட்ட தானியங்கள் சரக்கு ரெயில்கள் மூலம் கொண்டு வரப்படுகின்றன. இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து நேற்று 1,600 டன் கோதுமை சரக்கு ரெயில் மூலம் சேலம் செவ்வாய்பேட்டை மார்க்கெட் ரெயில் நிலையத்துக்கு வந்தது. இந்த கோதுமை மூட்டைகளை தொழிலாளர்கள் ரெயிலில் இருந்து இறக்கி லாரிகளில் ஏற்றினர். பின்னர் அந்த மூட்டைகள் குடோன்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

Next Story