மாவட்ட செய்திகள்

தாரமங்கலம் அருகே9 வயது சிறுமியை கொலை செய்தது ஏன்?கைதான தொழிலாளி பரபரப்பு வாக்குமூலம் + "||" + Arrested worker sensational confession

தாரமங்கலம் அருகே9 வயது சிறுமியை கொலை செய்தது ஏன்?கைதான தொழிலாளி பரபரப்பு வாக்குமூலம்

தாரமங்கலம் அருகே9 வயது சிறுமியை கொலை செய்தது ஏன்?கைதான தொழிலாளி பரபரப்பு வாக்குமூலம்
9 வயது சிறுமியை கொலை செய்தது ஏன்? கைதான தொழிலாளி பரபரப்பு வாக்குமூலம்
தாரமங்கலம்:
தாரமங்கலம் அருகே 9 வயது சிறுமியை கொலை செய்தது ஏன்? என்பது குறித்து கைதான தொழிலாளி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
நெசவு தொழிலாளி
சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை அடுத்த தெசவிளக்கு கிராமம் கீழ் மாட்டையாம்பட்டி அருகே உள்ள பூவான்வளவு பகுதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன். இவருடைய மகன் தனபால் (வயது 20), நெசவு தொழிலாளி. இவர் கடந்த 1-ந் தேதி மாலை 4 மணியளவில் கீழ் மாட்டையாம்பட்டி பகுதிக்கு வந்தார்.  அங்கு தெருவில் விளையாடி கொண்டிருந்த 9 வயது சிறுமியிடம் நுங்கு வெட்டி தருவதாக ஆசைவார்த்தை கூறி தனியாக அழைத்து சென்றார்.
அப்போது தனபால் அந்த சிறுமியை கற்பழித்து கொலை செய்தார். இந்த கொடூர சம்பவம் குறித்து தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நெசவு தொழிலாளி தனபாலை கைது செய்தனர். மேலும் தனபால் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-
உல்லாசம்
எனக்கு மது குடிக்கும் பழக்கம், சிகரெட் பிடிக்கும் பழக்கம் உண்டு. மேலும் பெண்களுடன் தொடர்பு உண்டு. எடப்பாடி, சங்ககிரி பகுதிகளுக்கு அடிக்கடி சென்று விபசார அழகிகளுடன் உல்லாசமாக இருப்பது வழக்கம்.
சம்பவத்தன்று குடிபோதையில் இருந்தேன். அப்போது சிறுமி தனியாக விளையாடி கொண்டிருந்ததை பார்த்ததும், எனக்கு உல்லாசம் அனுபவிக்க மோகம் ஏற்பட்டது. இதனால் சிறுமியிடம் நுங்கு வெட்டித்தருவதாக ஆசைவார்த்தை கூறி, அழைத்து சென்றேன். அப்போது அங்கு ஒரு மாமரத்தின் அடியில் வைத்து சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தேன். அதற்கு அந்த சிறுமி தனது தந்தையிடம் தெரிவிப்பதாக தெரிவித்தாள்.
மேலும் நான் சிறுமியை கீழே தள்ளி கற்பழிக்க முயன்ற போது சத்தமாக கூச்சலிட்டாள். இதனால் ஆத்திரத்தில் நான் கையில் இருந்த அரிவாளால் வெட்டினேன். மேலும் செங்கல்லால் தாக்கி கொன்றேன்.
இவ்வாறு தனபால் வாக்குமூலம் அளித்துள்ளார்.