மாவட்ட செய்திகள்

சேலம் உருக்காலையில்ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கலன்களை கலெக்டர் ஆய்வு + "||" + Collector inspection of oxygen producing vessels

சேலம் உருக்காலையில்ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கலன்களை கலெக்டர் ஆய்வு

சேலம் உருக்காலையில்ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கலன்களை கலெக்டர் ஆய்வு
ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கலன்களை கலெக்டர் ஆய்வு
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. பல இடங்களில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகளுக்கு தடையில்லாமல் ஆக்சிஜன் வழங்குவதற்காகவும், கூடுதல் ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும் சேலம் உருக்காலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்து வரும் கலன்களை நேற்று மாவட்ட கலெக்டர் ராமன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
அப்போது, சேலம் மாவட்டத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் உற்பத்தி செய்யும் ஆக்சிஜனை உடனுக்குடன் அனுப்பி வைக்குமாறு உருக்காலை நிறுவன அதிகாரிகளிடம் கலெக்டர் ராமன் கேட்டுக்கொண்டார். அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், உருக்காலை நிறுவன அலுவலர்கள் உடனிருந்தனர்.