மாவட்ட செய்திகள்

கொண்டலாம்பட்டி அருகேதென்னை மரத்தில் இருந்துதவறி விழுந்த மாணவர் சாவு + "||" + Death of a student who fell from a coconut tree

கொண்டலாம்பட்டி அருகேதென்னை மரத்தில் இருந்துதவறி விழுந்த மாணவர் சாவு

கொண்டலாம்பட்டி அருகேதென்னை மரத்தில் இருந்துதவறி விழுந்த மாணவர் சாவு
தென்னை மரத்தில் இருந்துதவறி விழுந்த மாணவர் சாவு
கொண்டலாம்பட்டி:
சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள பெரிய புத்தூர் சக்தி கோவில் வட்டத்தை சேர்ந்தவர் கோபி. இவருடைய மகன் குமரேசன் (வயது 18). இவர் பெருமாம்பட்டி அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மதியம் வீட்டுக்கு அருகே உள்ள ஒரு தோட்டத்துக்கு தேங்காய் பறிக்க சென்றுள்ளார். அப்போது தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கொண்டலாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.