மாவட்ட செய்திகள்

ஆத்தூர் அருகேபெண்ணின் செல்போனுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பிய தொழிலாளிக்கு தர்மஅடி + "||" + Dharmaadi to the worker who sent the pornographic SMS

ஆத்தூர் அருகேபெண்ணின் செல்போனுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பிய தொழிலாளிக்கு தர்மஅடி

ஆத்தூர் அருகேபெண்ணின் செல்போனுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பிய தொழிலாளிக்கு தர்மஅடி
ஆபாச குறுந்தகவல் அனுப்பிய தொழிலாளிக்கு தர்மஅடி
ஆத்தூர்:
ஆத்தூர் அருகே உள்ள அப்பம்மசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் பாலாஜி. இவருடைய மகன் சதீஷ்குமார் (வயது 22). இவர் உடையார் பாளையத்தில் உள்ள ஒரு டைல்ஸ் கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் மந்தைவெளி பகுதியை சேர்ந்த திருமணம் ஆன 27 வயது பெண்ணின் செல்போனுக்கு ஆபாசமாக குறுந்தகவல்களை அனுப்பி உள்ளார். கடந்த 15 நாட்களாக அவர் இவ்வாறாக ஆபாச குறுந்தகவல்களை அனுப்பியதாக தெரிகிறது. இது குறித்து அந்த பெண் தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து, ஆபாச குறுந்தகவல் வந்த செல்போன் எண்ணுக்கு, அவர் போன் செய்து, சதீஷ்குமாரை, நேரில் சந்திக்க வரவழைத்தார். தொடர்ந்து ஆத்தூர் கேசவலு ரோட்டுக்கு வந்த சதீஷ்குமாரை, அந்த பெண்ணின் கணவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து தர்ம அடி கொடுத்தனர். இது குறித்து தகவல் அறிந்த ஆத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, சதீஷ்குமாரை அவர்களிடம் இருந்து மீட்டனர். மேலும் ஆத்தூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று சதீஷ்குமாரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.